மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கப்படும்..!!

Read Time:2 Minute, 10 Second

z_p19-The-good-01பின்தங்கிய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கு, பாதணிகளை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அடுத்த 5 வருடங்களுக்குள், கல்வித் திட்டங்களில் மாற்றஞ்செய்யப்படும். அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும், இரு பாடசாலைகள் வீதம், சகல வசதிகளுடனும் கூடிய பிரசித்த பாடசாலை போன்று அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவம், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் கல்வியமைச்சை நான் பாரமெடுத்து, எதிர்வரும் 8ஆம் திகதியுடன் ஒரு வருடமாகவுள்ளது. இலவசச் சீருடை விவகாரத்தில் பல்வேறுபட்ட திசையில் அழுத்தங்களும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன.

அத்தனைக்கும் முகங்கொடுத்து, பாடசாலைச் சீருடைக்கான வவுச்சர் முறையை அறிமுகப்படுத்தினேன்.

இம்முறைமையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. காலப்போக்கில் அவை, சீர்செய்யப்படும். கடந்த ஆட்சியில், தரமற்ற சீருடையைக் கொள்முதல் செய்திருந்தாhர்கள். அந்த 12 இலட்சம் சீருடைகள், கல்வியமைச்சின் களஞ்சியசாலையில் தேங்கிக் கிடக்கின்றன. இதுபோன்ற மோசடிகளை நிறுத்துவதற்கே, வவுச்சர் முறைமையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருவரைத் தாக்கி பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டை கொள்ளையிட்டவர் கைது..!!
Next post மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை..!!