வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: ஜப்பான் போர்க்கோலம்…!!

Read Time:4 Minute, 30 Second

b72a8c31-027c-4bf7-a045-ace94ee6674f_S_secvpfவடகொரியா இன்று நடத்திய அணுகுண்டு பரிசோதனை ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
இதை எங்களால் சகித்துக்கொள்ள இயலாது. வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என ஜப்பான் எச்சரித்துள்ளது.

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.

முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.

இந்நிலையில், இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வட கொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்று சற்றுமுன் தெரிவித்துள்ளது.

உலக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத கொடூரமான ஹிரோஷிமா நாகசாகியில் நடந்த போரில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஹைட்ரஜன் குண்டால் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது முறையாக வட கொரியா வெற்றிகரமாக அணு ஆயுத பரிசோதனை செய்தது நினைவிருக்கலாம்.

இந்த சோதனையை அணு ஆயுத பரவல் ஒப்பந்த மீறல் என குற்றம்சாட்டி, அப்போது அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு தன்னிடம் ஆயுத பலம் இருப்பதாக வடகொரியா சவால் விட்டது. இந்நிலையில், இன்றைய ஹைட்ரஜன் குண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அணு ஆயுத திட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என வடகொரியா வெளிப்படையாக அறிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பொறுப்புமிக்க நாடாக நாங்கள் நடந்து கொள்வோம். எங்களுடையை இறையாண்மை மீறப்பட்டாலொழிய அவற்றை பிறர்மீது பயன்படுத்த மாட்டோம். மற்றவர்கள் கையில் அவை கிடைக்கும் வகையிலும் அஜாக்கிரத்தையாக இருக்க மாட்டோம் என இன்றைய பரிசோதனைக்கு பின்னர் வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறிய வகையில் இன்று அணுகுண்டை வெடித்து பரிசோதித்திருக்கும் வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி தருவோம் என ஜப்பான் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, வடகொரியா இன்று நடத்திய அணுகுண்டு பரிசோதனை ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.

இதை எங்களால் சகித்துக் கொள்ள இயலாது. வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளார். இதனால், கிழக்காசிய பிராந்தியத்தில் அணுஆயுதப்போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலி..!!
Next post சேலத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை…!!