By 7 December 2007

போலீஸ் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை: தடவியல் சோதனைக்கு பெண் என்ஜினீயர் கடித நகல்

தஞ்சையில் போலீசாரின் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட பெண் என்ஜி னீயரின் கடித நகல் தட வியல் சோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- கோவை பெண் என்ஜினீயர் அகிலாண்டேசுவரியின் தற் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் முறையாக விசாரணை நடத்தி வருகின் றனர். விசாரணையில் நிறைய விவரங்கள் தெரியவந்து உள்ளன. இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், அகிலாண்டேசுவரி மற்றும் அவரது பெற்றொருடன் போனில் தொடர்புவைத்து இருந்திருக்கிறார். மேலும் 17-11-2007-ந்தேதி அன்று நள்ளிரவு 1 மணி அளவில் அகிலாண்டேசுவரி தஞ்சைக்கு வருவது குறித்து அவரிடம் இருந்து கிடைத்த எஸ்.எம்.எஸ். தகவ லின் பேரில் சேதுமணி மாதவன் பஸ்நிலையம் சென்று அவரை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு தெற்கு போலீஸ் நிலையத் துக்கு ஒரு லாட்ஜில் அரசு என்ற பெயரில் அகிலாண் டேசுவரியின் தந்தை முன்பதிவு செய்து இருந்த அறையில் தங்கவைத்து உள்ளார்.

மீண்டும் 19-11-2007-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு அவர் தங்கி இருந்த லாட்ஜக்கு சென்று இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் பார்த்தது தெரியவருகிறது.

இவ்வாறு அகிலாண்டேசு வரியுடன் சேதுமணி மாதவன் தொடர்ந்து போன் மூலம் நேரிலும் தொடர்பு கொண்டதன் காரண மாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்ததால் சேதுமணி மாதவனை நவம்பர் 21-ந்தேதி கைது செய்து கோர்ட்டில்

ஆஜர்படுத்தினோம்.இந்நிலையில் சேதுமணி மாதவன் கோர்ட்டில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றவழக்கில் தொடர் புடைய ஒரு எதிரியை அதுவும் பெண்ணை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்து லாட்ஜில் தங்கவைத்து மறுபடியும் அவருடன் இறப்பதற்கு முன்பும் சென்று பார்த்துவந்த முறைகேடான செயலுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கைபடி தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாஷ் குமார் இன்ஸ்பெக்டர் சேது மணிமாதவனை சஸ் பெண்டு செய்தார்.

இதேபோல் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அகிலாண்டேசுவரியை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (63) என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

இதற்கிடையே அகிலாண் டேசுவரி எழுதியதாக அவரது பெற்றோர் ஒரு கடித நகலை பலருக்கு விநி யோகம் செய்துள்ளனர். இந்த கடிதத்தில் கண்ட விவரங்கள் சேதுமணிமாதவன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகி யோருக்கு எதிரான மிக முக்கியமான சாட்சியமாக உள்ளது. ஆனால் கடிதம் (அசல்) யாரிடம் உள்ளது எனத்தெரியவில்லை.

இந்த முக்கியமான தட யத்தை புலன் விசாரணைக்கு கிடைக்காமல் மறைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தஞ்சை டி.எஸ்.பி. குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் மீது துறை வாரியான நடவடிக்கை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அகிலாண்டேசுவரி தற்கொலை செய்துகொள் வதற்கு முன் பெற்றோருக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடித நகல் தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. எனினும் தற்போது வெளியாகி உள்ளது. கடித நகல் என்பதால் முழு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது.

நகல் கடிதம் எங்கிருந்து யார் மூலம் வந்தது என்ற விவரம் தெரியவில்லை. அகிலாண்டேசுவரியின் பெற்றோர்கள் அசல் கடி தத்தை எந்த கோர்ட்டில் வேண்டுமானால் சமர்ப்பிக் காலாம்,

அகிலாண்டேசுவரியின் பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை இன்று நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அகிலாண்டேசுவரி தற் கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த விசாரணைக்கு பின்பு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மோசடி தொடர்பாக யார் புகார் அளித்தாலும் புகாரின்பேரில் வழக் குப்பதிவு செய்து தொடர்புடையவர்களை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதுதான் போலீசாரின் பணியேதவிர பாதிக்கப்பட்டோர்களுக்கு ரொக்கம் பெற்றுத்தருவது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன், பன்னீர்செல்வம், டி.எஸ்.பி. முத்தரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

தஞ்சையில் பெண் என்ஜினீயர் தற்கொலை: வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றவேண்டும்; மனித உரிமை பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தல்

வழக்கு விசாரணைக்காக தஞ்சையில் போலீஸ் காவலில் இருந்த கோவை பெண் என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணம் பறிப்பு மற்றும் செக்ஸ் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அகிலாண்டேஸ்வரி சாவதற்கு முன்பு தனது தாய்க்கு எழுதிய கடிதத்தால் இந்த வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.

அகிலாண்டேஸ்வரி தற் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வரும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை நிலை அறிய முடியும் என்று மனித உரிமை பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக திருச்சியில் நடந்த இம்மன்றத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கோவை பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் நோயாளி என்ற போர்வையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை நிலையை அறிய முடியும்.

மேலும் இந்த வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள் குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று 1000 வக்கீல்களிடம் கையெழுத்து பெற்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கில் போலீசார் அத்து மீறல்கள் குறித்து புகார் கொடுப்பது. இந்த வழக்கில் நியாயம் கிடைக்க வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக தலைமை நீதிபதி பதிவாளர் மற்றும் மனித உரிமை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்வது.

சேதுமணி மாதவன் ஜாமீனில் வெளிவந்தால் சாட்சிகளை கலைப்பார் என்பதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை விசாரணை கைதி போல கோர்ட்டு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஐகோர்ட்டு வக்கீல் மகாதேவன், புதுகை வக்கீல் சங்க செயலாளர் ராமலிங்கம், கும்பகோணம் வக்கீல்கள் பிரபு, கமலநாதன், திருச்சி வக்கீல்கள் போஜ குமார், ஆதிநாராயண மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ராஜ× உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.டி.ஓ. முன்னிலையில் அகிலாண்டேசுவரி பெற்றோர் நாளை வாக்குமூலம் அளிப்பார்களா?

அகிலாண்டேசுரி பெற்றோர் ஆர்.டி.ஓ.விடம் நாளை வாக்குமூலம் அளிப்பார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பெண் என்ஜினீயர் அகிலாண்டேசுவரி தற்கொலை செய்தது தொடர் பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை இன்றும் நாளையும் நடக்கிறது. விசாரணையில் ஆஜர் ஆகி வாக்குமூலம் அளிக்கும்படி அகிலாண்டேசுவரியின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இன்று ஆஜராக வரவில்லை என்று ஆர்.டி.ஓ.வுக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.

இதுபற்றி ஆர்.டி.ஓ. சவுந்தர ராஜன் கூறியதாவது:-

“அகிலாண்டேசுவரி பெற்றோரிடம் இருந்து தந்தி வந்தது உண்மை தான். இறந்த மகளுக்காக சடங்குகள் தொடர்ந்து 3 நாட்களுக்கு செய்ய வேண்டியது இருப்பதால் 6-ந் தேதி(அதாவது இன்று) நடைபெறும் நீதிவிசாரணையில் கலந்து கொள்ள முடியாது. வேறு ஏதாவது தேதியில் வந்து வாக்கு மூலம் அளிப்பதாக கூறியிருந்தனர்.

நாங்கள் 7-ந் தேதி நடைபெறும் நீதிவிசாரணையில் கலந்து கொள்ளும் படி அவர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம்.

மேலும் அகிலாண்டேசுவரி கணவர் துபாயில் வேலை பார்த்து வருவதால், அகிலாவின் மாமனார், மாமியாருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறோம். மேலும் அகிலாண்டேசுவரி மரணம் அடைந்த ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கும் சம்மன் அனுப்பி இருக்கிறோம். இவர்கள் அனைவரும் விசாரணையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

போலீஸ் துறையை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்துகிறோம். மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த விசாரணையில் கலந்து கொண்டு தங்களுடைய சாட்சியங்களை அளிக்கலாம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

«Comments are closed.