நாம் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

Read Time:2 Minute, 34 Second

laugh_good_001.w245ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.

சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும். சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும். சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.

அதிக டென்ஷன் உள்ளவர்கள், வேலைப்பளு கொண்டவர்கள் சிறிது நேரம் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது நல்லது. அப்போது நம்மை அறியாமலேயே சிரிப்பு தோன்றும். அப்போது டென்ஷன் குறைந்து உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

நாம் கோபப்படும் போது நமது உடல், மனம், மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

கோபத்தைக் குறைத்து சிறிது புன்னகையுடன் நடந்துகொண்டால் சொர்க்கம் என்பது வேறெங்கும் இல்லை, நம்மைச்சுற்றிதான் என்பதை நம்மால் உணர முடியும்.

தற்போது நகைச்சுவை மன்றங்கள் அதிகரித்திருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லது. பிறர் மனது புண்படும்படி சிரிப்பதோ, நக்கலாக சிரிப்பதோ சிரிப்பல்ல. மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய, உள்மனதிலிருந்து வரும் சிரிப்பே மகத்தானது.

இவ்வுலகை ரசிப்போம்… மனம் விட்டுச் சிரிப்போம்… நம் வாழ்வை நேசிப்போம்… வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சும்மாவா சொன்னாங்க.

சிரிப்பது நல்லது தான்‍‍, ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு, ஓவரா சிரிச்சா “வேற பேரு” உண்டு “ஹி ஹி ஹி “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயரோடு சிலையான சிற்பங்கள்…!!
Next post தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் இவர்…!!