ஆஸ்திரேலியாவை அதிர வைத்த “வீல் சேர்” தாத்தா.. நகர முடியாத அவர் மீது 60 செக்ஸ் புகார்கள்…!!

Read Time:2 Minute, 11 Second

13-1452674855-wheelchair-600ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 77 வயது தாத்தா மீது 60 விதமான பாலியல் சேட்டைப் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

நகர முடியாமல் வீல் சேரில் வலம் வருபவர் அவர். ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும் இவர் தவறாக நடந்து கொண்டுள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.

60களிலும், 70களிலும் இவர் செய்த சேட்டைகளுக்காகத்தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் இவர்.

இவர் மீது பெண்கள், சிறுமிகள் மீது அநாகரீகமான முறையில் பாலியல் சேட்டைகளைச் செய்ததாக 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தனது குடும்பத்தாருடன் முறைகேடான உறவு கொண்டதாக 8 புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் இவர் செய்த குற்றத்தை பிறர் மீது சுமத்தி திசை திருப்பியதாகவும் இவர் மீது புகார்கள் உள்ளன.

இந்த சேட்டைக்காரத் தாத்தாவைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு நீதிபதி ஜாமீன் அளித்தார்.

இவர் செய்த குற்றங்களுக்காக இவரது இருமகள்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது அவர்களை விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஜாமீனில் விடுதலையாகும் இவர் ரத்தக் கொதிப்பு உள்ளிட்டவற்றால் அவதிப்படுவதால் இவரை வீட்டில் தங்க வைத்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாளை இந்த தாத்தா விடுதலை செய்யப்படவுள்ளார்.

அவருக்கு பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதன் கிரகத்தில் உருகாத பனிக்கட்டிகள்…!!
Next post ஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!