பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை: தண்டனையை குறைக்க உத்தரவிட்ட நீதிபதி…!!

Read Time:2 Minute, 11 Second

punish_decrease_001கனடா நாட்டில் 10 வார குழந்தையை இரக்கம் இன்றி கொன்ற தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை பாதியாக குறைத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Rourke Desmanche என்ற நபருக்கு கடந்த 2010ம் ஆண்டுஆண் குழந்தை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் போதை மருந்தை உட்கொண்ட தந்தை, தனது 10 வார குழந்தையை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மயக்கமுற்ற குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தபோது சில தினங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

குழந்தையை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த தந்தையை சில வாரங்களுக்கு பிறகு பொலிசார் கைது செய்தனர்.

பின்னர், தந்தை மீதான குற்றம் 2013ம் ஆண்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தண்டனை காலத்தை குறைக்க வலியுறுத்தி கைதி மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, ‘குற்றவாளி கைது செய்யப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஏற்கனவே 4 வருடங்கள் 75 நாட்கள் சிறையில் கழித்தாகிவிட்டது.

எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 5 வருடங்கள் மற்றும் 25 நாட்களாக குறைப்பதாக கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்நிய செலாவணி விகித மாற்றத்தினால் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம்…!!
Next post அட்டன் விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!