தைவான் நாட்டின் முதல் பெண் அதிபரான சாய் இங்-வென்…!!

Read Time:1 Minute, 48 Second

5a052102-24f3-4d4c-bf17-26ee75ccfb5f_S_secvpfசீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

அதிபர் தேர்தலில் களத்தில் நிற்கும் தேசிய கட்சியின் எரிக் சூ-வின் ஆதரவாளர்களும், ஜனநாயக முன்னேற்றக் கட்சி வேட்பாளர் சைங்-இன்(Tsai ing) ஆதரவாளர்களும் தலைநகர் தைபே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. தேர்தலின் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த சாய் இங்-வென் அதிக வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு தோல்வியடைந்தார்.

மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக எரிக் சு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் பதிவியேற்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குட்டியை இழந்து உணர்ச்சியற்று கிடக்கும் தாய் திமிங்கலத்தை தேற்றும் ஆண் திமிங்கலம்: உணர்வுப்பூர்வமான வீடியோ…!!
Next post சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்: பொதுமக்கள் உள்பட 135 பேர் ஒரேநாளில் பலி…!!