சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தீர்மானம்…!!

Read Time:1 Minute, 41 Second

AL-Exam_2கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது.

இதற்கான புதிய பாடநெறிகளை ஒழுங்கு செய்துள்ளதாக நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்கு தோற்றுவதற்காக கட்டாயப்படுத்தப்பட்ட பாடங்கள் தொடர்பிலும் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யப்படும் பாடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 9 இலிருந்து 6 அல்லது 7 வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்களின் நன்மை கருதியே இவ்வாறான தீர்மானங்களை எடுத்ததாகவும் தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெமட்டகொடை விபத்தில் தாயும் மகளும் பலி; 15 வயது சிறுவன் கைது…!!
Next post 96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது…!!