விமானத்தில் பயணம் செய்த வான் கோழி…!!

Read Time:2 Minute, 26 Second

yuyuவிமா­ன­மொன்றில் பயணம் செய்த பெண்ணொரு­வர் தன்­னுடன் வான் கோழி­யொன்­றையும் கொண்டு சென்று சக பய­ணி­களை வியப்­பி­லாழ்த்­தினார்.

வொஷிங்டன் மாநி­லத்­தி­லுள்ள சியாட்டில் நக­ரி­லி­ருந்து உட்டாஹ் மாநி­லத்தின் சோல்ட் லேக் சிட்டி நக­ருக்கு சென்று கொண்­டி­ருந்த டெல்டா எயார்லைன்ஸ் விமா­னத்தில் மேற்­படி வான் கோழி பயணம் செய்­தது.

ஜொடீ ஸ்மெல்லி எனும் பெண் இந்த வான் கோழியை வளர்த்து வரு­கிறார். உள­வியல் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு சில செல்­லப்­பி­ரா­ணி­களை வளர்ப்­ப­தற்கு மருத்­து­வர்கள் சிபா­ரிசு செய்­வ­துண்டு. உணர்­வு பூர்வமான துணை­யான பிரா­ணிகள் என இவை அழைக்­கப்­ப­டு­கின்­றன.

ஜொடீ ஸ்மெலி, மேற்­படி வான் கோழியை தனது உணர்­வுபூர்வ துணை­யான பிரா­ணி­யாக வளர்த்து வரு­கிறார்.

அவர் கடந்த வாரம் தனது வீட்­டி­லி­ருந்து உற­வினர் வீடொன்­றுக்கு சென்­ற­போது விமா­னத்தில் மேற்­படி வான் கோழி­யையும் அவர் தன்­னுடன் அழைத்துச் சென்றார்.

இவ்வான் கோழியை மிக சிறிய பரு­வத்­தி­லி­ருந்து தான் வளர்த்து வரு­வ­தா­கவும் அதற்கு ஈஸ்டர் என பெய­ரிட்­டுள்­ள­தா­கவும் ஜொடீ கூறு­கிறார்.

இந்த விமானப் பய­ணத்­தின்­போது இவ்வான் கோழிக்கு விசேட டயப்பர் ஒன்றை அவர் அணி­வித்­தி­ருந்தர்.

சுமார் ஒன்­றரை மணித்­தி­யாலம் நீடித்த இந்த பய­ணத்­தின்­போது இவ்வான் கோழி அமை­தி­யாக காணப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இவ்வான் கோழியை விமான நிலை­யங்­களில் தள்ளு வண்டியில் இல்லாமல், சக்கர நாற்காலியில் வைத்தே ஜொடீ ஸ்மெலி கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த சவுதி மணமகனுக்கு கிடைத்த திருமண அன்பளிப்பை பார்த்தால் புல்லரித்துப் போவீர்கள்: வீடியோ இணைப்பு..!!
Next post காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களா -உதய கம்மன்பில…!!