காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களா -உதய கம்மன்பில…!!

Read Time:3 Minute, 6 Second

udaya kammanvila (2)எம்பிலிப்பிட்டிய – மஹஎல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமையால் சுயாதீன காவல்துறை ஆணைக்குழு செயற்படுவதில் பயனில்லை என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குற்றம்சுமத்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சிகள் உள்ளபோதும் குறித்த காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செயப்படவில்லை.

அவர்கள் குறைந்தபட்சம் பணிநீக்கமேனும் செய்யப்பட்டவில்லை.

இந்த சம்பவம், தொடர்பாக உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்களா என மக்கள் உறுதியாக நம்ப முடியாமல் உள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, எம்பிலிப்பிட்டிய காவல்துறையின் தாக்குதல் மற்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளரின் செயற்பாடுகள் தொடர்பில், நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இன்று காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை தெரிவித்துள்ளது.

முறைப்பாட்டை தெரிவித்த பின்னர் கருத்து வெளியிட்ட இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் வித்தானகே, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளரின் பொறுப்பு, மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதேயன்றி, காவல்துறையினரை பாதுகாப்பது அல்லவென ரஞ்சித்த வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணம் தொடர்பிலான ஊடகவியலாளர்களின் பதிவுப் புத்தகங்கள் எம்பிலிப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் வைத்து பலவந்தமாக பறிக்கப்பட்டமையை கண்டிப்பதாக இலங்கை ஊடக ஆசிரியர் அமைப்பு இன்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் பயணம் செய்த வான் கோழி…!!
Next post மனைவியின் சகோதரியான சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது…!!