புதிய வகை ராஜநாகம் கென்யாவில் கண்டு பிடித்துள்ளனர்.

Read Time:1 Minute, 25 Second

புதிய ராஜநாகத்தை கென்யாவில் கண்டு பிடித்துள்ளனர். உலகிலேயே நீளமான இந்த ராஜநாகம் ஒரே கடியில் 20 பேரை கொல்லக்கூடிய விஷம் கொண்டது. கென்யாவில் பாம்பு பண்ணை ஒன்றில் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜநாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ராஜநாகம் முதலில் கருப்பு கழுத்தைக் கொண்ட ராஜநாக வகையை சேர்ந்தது என்று கருதப்பட்டது. பின்னர் ஆய்வில் இது புதிய வகை ராஜநாகம் என்று தெரிய வந்தது. கருப்பு கழுத்து ராஜநாகம் இரண்டு மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருக்கும். இந்த ராஜநாகம் 2.6 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. உலகிலேயே மிகவும் நீளமான ராஜநாகமாக இது கருதப்படுகிறது. ஒருமுறை கடிக்கும்போது 6.2 மில்லி லிட்டர் விஷத்தை கக்குகிறது. இது 20 பேரை கொல்லக்கூடிய ஆற்றல் படைத்தது. உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா ஆகிய நாட்டின் காட்டுப்பகுதியில் இந்த வகை ராஜநாகம் அதிகம் காணப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காவேரி – வைத்தி: சமரசம் ஏற்படவில்லை!
Next post வயிற்றில் இருப்பது பெண் சிசு என்பதற்காக கருவை கலைத்தால் ஆயுள் சிறை