அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை…!!

Read Time:2 Minute, 37 Second

hqdefaultகாலஞ்சென்ற காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் இறுதிக் கிரியைககள் எதிர்வரும் சனிக்கிழமை (23) கந்தாளாயில் நடைபெறவுள்ளது.

பூரண அரச மரியாதையுடன் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன நேற்று (19) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (20) இரவு கம்பஹா வீதியிலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பராக்கிரம மாவத்தை இலக்கம் 20 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று இரவு பூதவுடல் கொண்டுசெல்லப்படவுள்ளது.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி பிறந்த எம்.கே.டி.எஸ் குணவர்தன 69 ஆவது வயதில் காலமானார்.

பொலிஸ் அதிகாரியாக சிறுது காலம் செயற்பட்ட அவர் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

1982 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டு அரசியலில் பிரவேசித்த எம்.கே.டி.எஸ் குணவர்தன 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

2001 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி வரை, எம்.கே.டி.எஸ் குணவர்தன புத்தசாசன பிரதி அமைச்சராக செயற்பட்டதுடன், 2014 ஆம் ஆண்டு அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி காணி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்லின் போது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதனையடுத்து தொடர்ந்து அவர் காணி அமைச்சராக செயற்பட்டு வந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எரிபொருள் விலை சூத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு…!!
Next post 49 வயதான சீனப் பிரஜை கைது…!!