வால் நட்சத்திரத்தில் ஐஸ் கட்டி கண்டுபிடிப்பு…!!

Read Time:1 Minute, 18 Second

images (2)வால்நட்சத்திரத்தில் ஐஸ் கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘ரோசட்டா’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்த விண்கலம் ‘மரபி’ என்ற வால் நட்சத்திரத்தை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது.

அதில், அந்த வால்நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மிகவும பிரகாசமாக தெரிகிறது. இத்தகவலை கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு ஆய்வகத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர் மூர்த்தி குடிபதி தெரிவித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

பொதுவாக ‘மரபி’ வால் நடசத்திரம் மிகவும் இருட்டாக காணப்படும். அது சூரியனை நோக்கி பறந்து சென்ற போது அதன் வெளிச்சம் பட்டதில் மேற்பரப்பில் உள்ள ஐஸ் ஆவியாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு…!!
Next post நீங்கள் மட்டும்தான் யோகா செய்வீர்களா?: உலக சாதனைக்காக எஜமானர்களுடன் ஒருமணி நேரம் டாகாசனம் செய்த 270 நாய்கள்…!!