ஜிக்கா வைரஸ் தாக்கி பிரேசிலில் மேலும் 5 குழந்தைகள் பலி…!!

Read Time:1 Minute, 36 Second

45b807b5-c029-4e05-9372-b225d6126ebc_S_secvpfபிரேசிலில் ஜிக்கா வைரஸ் தாக்கி மேலும் 5 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பிரேசிலில் ஜிக்கா வைரஸ் நோய் தாக்கி மேலும் 5 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 3,893 பேருக்கு மர்ம நோய் தாக்கியுள்ளது. இதில், 224 பேருக்கு ஜிக்கா வைரஸ் நோய் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது.

இந்த வைரஸ் கருவில் உள்ள குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துதல், பெருமூளை வாதம், கண் பார்வை இழத்தல் மற்றும் கேட்கும் திறன் குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிரிக்கா முதல் லத்தீன் அமெரிக்கா வரை ஏடிஸ் ஏகிப்தி (Aedes aegypti) என்ற கொசு மூலம் இந்த வைரஸ் நோய் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயமாற்று சிகிச்சை போல குரங்குக்கு வேறு தலையை பொருத்தி ஆபரேஷன்: விஞ்ஞானிகள் சாதனை…!!
Next post ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதி கணவன்–மனைவி பலி…!!