சவுதி அரேபியாவில் செஸ் விளையாட்டுக்கு தடை: மதகுரு அறிவிப்பு…!!

Read Time:2 Minute, 15 Second

415b1ecb-3eba-49ed-af9a-1bb77da8cf3c_S_secvpfபகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் ‘செஸ்’ விளையாட்டை தடை செய்ய வேண்டும் என சவுதி அரேபிய மதகுரு வலியுறுத்தியுள்ளார்.

‘செஸ்’ அறிவுத்திறன் போட்டியாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை சவுதி அரேபியாவின் தலைமை மதகுரு ஷேக் அப்துல் அஷிஷ் பின்–அப்துல்லா அல்–ஷேக் பிறப்பித்துள்ளார். கடந்த வாரம் டெலிவிஷனில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்த ‘செஸ்’ விளையாட்டு மக்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. நேரத்தையும், பணத்தையும் வீணாக்கி விரயம் செய்கிறது.

இது திருக்குர்ரானால் தடை விதிக்கப்பட்ட ‘மைசிர்’ என்ற விளையாட்டுடன் தொடர்புடையது.

எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார். ஆனால், மதத் தலைவர் அப்துல்லா அல்–ஷேக்கின் இந்த அதிகாரப்பூர்வ ஆணைப்படி ‘செஸ்’ விளையாட்டுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்க முடியாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையே மெக்காவில் வருகிற வெள்ளிக்கிழமை ‘செஸ்’ விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதகுரு விதித்துள்ள தடை குறித்து சவுதி ‘செஸ்’ சங்கத்தின் சட்டக்குழு கூட்டி விவாதித்தது.

முடிவில், திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என அதன் தலைவர் முசாபின் தைலி அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…!!
Next post சூரியக் குடும்பத்தில் புதிய கோள்…!!