அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 3 அடி உயரத்துக்கு பனிப்பொழிவு…!!

Read Time:2 Minute, 20 Second

49c1f2a8-bb9b-4233-a86f-5cf7d294c5ee_S_secvpfஅமெரிக்காவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது.
இதனால் ரோடுகளிலும், வீட்டு கூரைகள் மற்றும் மாடிகளிலும் பனி கொட்டுகிறது. ரோடுகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் வாஷிங்டனில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்புயல் வீசுவதால் வாஷிங்டன் உள்பட கிழக்கு கடற்கரை நகரங்களுக்கான விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 ஆயிரம் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. குடியிருப்பு வாசிகள் மதியம் 1 மணிக்கு மேல் ரோடுகளில் கார் ஓட்டிச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே அங்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் சேமித்து வைத்துள்ளனர். அதனால் பால், முட்டை, ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க் கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

அதே போன்று அமெரிக்காவில் டென்னிசே, மசாசூசெட்ஸ் மாகாணங்களும் கடும் பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன், மசாசூசெட்ஸ், டென்னிசே ஆகிய 3 மாகாணங்களில் சுமார் 6 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூஜை செய்வதாக பெண்களிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இந்திய சாமியார்மீது வழக்கு…!!
Next post வேப்பந்தட்டை அருகே வீட்டுக்கு வந்த பார்சலில் இருந்த வெடிகுண்டு வெடித்து மூதாட்டி சாவு…!!