குண்டுகளால் துளைக்கப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் புகைப்படத்தை பொக்கிஷமாக பாதுகாத்த அமெரிக்க சீல் வீரர்…!!

Read Time:3 Minute, 47 Second

8ee32e88-5378-4814-b4ea-c5e1daec7a40_S_secvpfபாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் உடல் குண்டுகளால் துளைக்கப்பட்ட புகைப்படத்தை சீல் எனப்படும் கப்பற்படையை சேர்ந்த வீரர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த தகவல் வெளியாகியுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேவி சீல்’ என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்த தாக்குதலில் குறிதவறாமல் துப்பாக்கியால் சுடும் சிறப்பு பயிற்சி பெற்ற சிலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவான ‘சீல்’ படையை சேர்ந்த வீரர்கள் சில நிமிடங்களுக்குள் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றி, பாகிஸ்தான் ராணிவத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒசாமாவின் பிணத்துடன் அபோட்டாபாத்தில் இருந்து பத்திரமாக திரும்பினர்.

இந்நிலையில், இந்த தாக்குதலை முன்நின்று நடத்திய சீல் படை வீரர்களில் ஒருவரான மேத்யூ பிஸொனேட் என்பவர், ஒசாமாவை வேட்டையாடிய தன்னுடைய ‘திரில்’ அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிட்டார். சமீபத்தில் வெளியான இந்த புத்தகத்தில் தனது துப்பாக்கியில் இருந்து பாய்ந்துச் சென்ற குண்டுகள்தான் ஒசாமாவை பரலோகத்துக்கு அனுப்பியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னர் அதன் கையெழுத்துப் பிரதியை தங்களிடம் சமர்பித்து அனுமதி பெறவில்லை என மேத்யூ பிஸொனேட் மீது குற்றம்சாட்டிய அமெரிக்க கடற்படை தலைமையகம் அவர்மீது தேசத்துரோகத்துக்கு நிகரான குற்றச்சாட்டை சுமத்தி விசாரித்து வருகின்றது.

இந்த விசாரணையை சந்தித்துவரும் மேத்யூ பிஸொனேட், தன்வசம் இதுவரை பாதுகாப்பாக வைத்திருந்த முக்கியமானதொரு புகைப்படத்தை தற்போது விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

‘ஆபரேஷன் ஜெரோனிமா’ எனப்படும் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற தாக்குதலில் தானும் ஓர் அங்கமாக இருந்ததற்கான சாட்சியமாக விளங்கும் இந்த புகைப்படத்தை ஒரு பொக்கிஷம் போல் இதுவரை பாதுகாத்து வந்ததாக மேத்யூ பிஸொனேட் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 32 ஆண்டுகள் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவால் முடங்கிய தென் கொரிய ரிசார்ட் தீவு விமான நிலையம்…!!
Next post அச்சுவேலியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை – புவி சரிதவியல் நிபுணர்கள்…!!