அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி…!!

Read Time:1 Minute, 50 Second

3bf697c9-608f-4941-832c-a6c46236d547_S_secvpfஅமெரிக்காவில் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெரும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதன்காரணமாக வாஷிங்டனில் அனைத்து வகையான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட கரோலினாவில் 1 லட்சம் வீடுகள் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் தவிக்கின்றன.

20 மாகாணங்களில் 8½ கோடி மக்கள் பனிப்புயலின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நேற்று மதியம் வரையில் பனிப்புயலால் ஏற்பட்ட விபத்துகளில் வடகரோலினா, வெர்ஜினியா, கென்டக்கி, டென்னிசி மாகாணங்களில் 9 பேர் பலியாகினர். வெர்ஜினியாவில் மட்டும் 989 கார் விபத்துக்கள் நடந்துள்ளன.

கென்டக்கி மாகாணத்தில் நேற்று 18 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. வாஷிங்டனில் 7 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

இன்று வாஷிங்டனில் பனிப்புயல் கடந்து செல்கிறபோது 30 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். 1922-ல் அதிகபட்சமாக 28 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

பனிப்புயலால் அமெரிக்க மக்களின் வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வெளி தாக்குதல்: 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி…!!
Next post ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பெயரில் ஆள்சேர்ப்பு…!!