அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெரும் தினங்கள் – முழுவிபரம்…!!

Read Time:3 Minute, 5 Second

1961323748Untitled-1அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் மாவட்ட மட்டத்திலான மக்கள் சந்திப்பு, பெப்ரவரி மாதம் முதல் இடம்பெறவுள்ளதாக, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை ஆராயும் குழு தெரிவித்துள்ளது.

20 பேர் அடங்கிய குறித்த குழுவினர், அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களை கேட்கும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், ஏனைய பகுதிகளில் பெப்ரவரி மாத ஆரம்பம் முதல் 29ம் திகதி வரை காலை 09.30 தொடக்கம் 04.30 வரை, அந்தந்த மாவட்ட செயலகங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரு நாட்கள் இதன்பொருட்டு ஒதுக்கப்படவுள்ளன.

மக்கள் தமது கருத்துக்களை எழுத்து மூலம் அல்லது வாய்மொழி மூலம் வழங்க முடியும்.

அந்தவகையில், பெப்ரவரி 1ம், 2ம் திகதிகளில் கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும், 3 மற்றும் 10ம் திகதிகளில் மாத்தளை மாவட்டத்திலும், 5ம், 6ம் திகதிகளில் களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும், 8ம், 9ம் திகதிகளில் காலி, கேகாலை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் மக்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளன.

அத்துடன் 10ம் 11ம் திகதிகளில் மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், 12 மற்றும் 13ம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணத்தில் 15ம், 16ம் திகதிகளிலும், அனுராதபுரம் மற்றும் புத்தளத்தில் 17, 18ம் திகதிகளிலும், நுவரெலியா மற்றும் பொலன்னறுவையில் 19ம், 20ம் திகதிகளிலும் மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்யலாம்.

மேலும், 23, 24ம் திகதிகளில் பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், 25, 26ம் திகதிகளில் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், 27 மற்றும் 29ம் திகதிகளில் இரத்தினபுரி மற்றும் அம்பாறை மவாட்டங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை 011 2 43 76 76 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புலமைப் பரிசில்…!!
Next post சய்ப்ரஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி…!!