தளி அருகே 3 மாத கர்ப்பிணி பெண் மர்மச்சாவு: போலீசில் புகார்…!!

Read Time:3 Minute, 47 Second

5e74067b-36da-4869-8536-03763e45e911_S_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ளது உனிச்சை நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 28). விவசாயி.

இவருக்கும், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிக்ககுண்டன அள்ளி கிராமத்தை சேர்ந்த புட்டசாமி கவுடா என்பவரின் மகள் கீதா(வயது 23)வுக்கும் இடையே கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது வரதட்சணையாக 7 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம ரொக்கமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

திருமணம் ஆன பிறகு கணவன்–மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளம்பெண் கீதா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று வீட்டில் கீதா மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து கணவர் மஞ்சுநாத் கர்நாடகத்தில் வசித்து வரும் பெற்றோருக்கு மகள் இறந்து விட்டதாக போனில் தகவல் கொடுத்தார்.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுவாறு மஞ்சுநாத் வீட்டிற்கு வந்தனர். அங்கு பிணமாக கிடந்த கீதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எங்களிடம் அடிக்கடி போனில் மனம் உடைந்த நிலையில் பேசுவார். தினமும் வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று கூறி வந்தார். நாங்கள் மகள் கீதாவிற்கு அறிவுரை மற்றும் ஆறுதல் கூறி வந்தோம். இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவரை கொலை செய்துள்ளனர் என்று கூறினர்.

கர்ப்பிணி பெண் இறந்த தகவல் அறிந்ததும், தளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பச்சமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீதாவின் அண்ணன் மோகன்குமார் தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது தங்கை கீதாவின் சாவில் மர்மம் உள்ளது. எனவே அவரது சாவிற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனைவி சாவு குறித்து கணவர் மஞ்சுநாத் கூறுகையில் நேற்று காலையில் கடைக்கு சென்று மளிகை சாமான்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் கீதா மயங்கிய நிலையில் கிடந்தார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இறந்து விட்டார் என்று கூறினார்.

இளம்பெண் கீதாவுக்கு திருமணம் நடந்து 1 1/2 வருடங்கள் ஆவதால் ஓசூர் சப்–கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேசில் ஜெயிலில் இருந்து 100 கைதிகள் தப்பி ஓட்டம் – துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி…!!
Next post ஆச்சரியத்திற்குரிய கால்களுடனான மீன் இனம்…!!