உடலில் பச்சை குத்துவதால் `எய்ட்ஸ்’ நோய் அபாயம்: ஆராய்ச்சி மாணவி தகவல்

Read Time:2 Minute, 30 Second

தேனாம் பேட்டை நீதிபதி பஷீர் அகமது செய்யது கல்லூரி மாணவி சந்திரா பவுலின் சென்னையில் எய்ட்ஸ் நோய் பரவுதல் தொடர்பாக புதிய கோணத் தில் ஆராய்ச்சி செய்துள்ளார். போதை ஊசி போடுதல் மற்றும் பச்சை குத்துதல் மூலம் `எய்ட்ஸ்’ பரவுதல் உள்ளதாப என்பதை கண்டு பிடிக்கும் வகையில் அவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். 3 ஆண்டு களாக இந்த ஆராய்ச்சி நடந் தது. அவருக்கு பேராசிரியை ரோஷனரா வழிகாட்டியாக இருந்தார். பாதுகாப்பாக ஊசி போடுதல் தொடர்பான சர்வ தேச அமைப்பின் கூட்டம் சமீபத்தில் ஜெனீவாவில் நடந் தது. அதில் சந்திரா பவுலின் தனது ஆராய்ச்சி அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் சென்னை நகரில் போதை ஊசி போடுதல், பச்சை குத்துதல் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவுவதாக கூறியிருந்தார். சென்னையில் போதை ஊசி போடும் பழக்கம் உள்ள 180 பேரை கண்டுபிடித்து அவர்களிடம் 3 ஆண்டுகளாக ஆய்வு செய்தார். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 94 சதவீதம் பேர் உடலில் பச்சை குத்தி இருந்த னர். போதை ஊசியை ஒருவருக்கொருவர் மாறி மாறி போட்டு கொள்ளுதல், தெரு வோரமாக இருக்கும் பச்சை குத்தும் தொழிலாளர்களிடம் பச்சை குத்தி கொள்ளுதல் மூலம் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருந்தது. இவர்கள் அனைவரும் 25 வயதில் இருந்து 48 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 94 சதவீதம் பேர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஜெயிலில் இருந்தவர்கள். அப்போது ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு இதன் மூலமும் எய்ட்ஸ் பரவி இருந்தது. பச்சை குத்தும் தொழிலா ளர்கள் ஒரே ஊசியையே பலருக்கும் பயன்படுத்துவது பழக்கம். இதன் மூலமும் எய்ட்ஸ் பரவியது தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இணைய தளத்தில் தோழிகள் கைவரிசை: என்னை செக்சுக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள்; கமிஷனரிடம் அழகு நிலைய பெண் புகார்
Next post கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு