ஐ.எஸ் தீவிரவாதக் குழுவை ஒழித்துக் கட்டப்போவதாக ஆஃப்கான் அதிபர் உறுதி…!!

Read Time:1 Minute, 58 Second

gfhghgஇஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவை, தாம் ஒழித்துக் கட்டுவதாக, ஆஃப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் குழுவினர் அங்கு அரசாங்கப்படைகளுடனும், தாலிபான் போராளிகளுடனும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.எஸ் ஆஃப்கானில் உருவான இயக்கம் அல்ல என்று பிபிசிக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்த அதிபர் அஷ்ரஃப் கானி, அதன் அட்டுழியங்கள் மக்களை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கூறினார்.

ஐ.எஸ் தப்பானவர்களை சீண்டியுள்ளதாகவும், தற்போது ஆஃப்கான் மக்கள் பழிவாங்க தூண்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் ஐ.எஸ்க்கு எதிரான செயற்பாட்டிற்கான அழைப்பை அதிபர் கானி விடுத்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் கிளையினை, தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்திருந்தது.
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கான் முன்னாள் தாலிபான் உறுப்பினர்கள் சேர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தக் குழுவை உருவாக்கியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆப்கானிஸ்தானிலுள்ள தீவிரவாதக் குழுக்கள் காரணமாக, அந்த நாட்டு பாதுகாப்புப் படைகள் சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சவுதி இளவரசர் தெரிவிப்பு…!!
Next post ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்…!!