செக்ஸ் வழக்கில் இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு உத்தரவு…!!
இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சவுத்ரி (69). யோகா குரு. அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் வக்கீல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் வக்கீலாக பணியாற்றினேன்.
அப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’செக்ஸ்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘செக்ஸ்’ தொந்தரவு கொடுத்தார். மேலும் மிரட்டலும் விடுத்தார். என்னை பணியில் இருந்தும் நீக்கினார் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு பிக்ரம் சவுத்ரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. மேலும் அவருக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் மீனாட்சிக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டது. யோகா குரு பிக்ரம் மீது மேலும் 5 பெண்கள் இது போன்ற புகார்களை தெரிவித்து இருந்தனர்.
Average Rating