தினமும் இந்த ஜூஸை 2 டம்ளர் குடித்து வந்தால், தொப்பையை வேகமாக குறைக்கலாம்…!!
உங்களால் பேண்ட் பட்டனைப் போட முடியாத அளவு தொப்பை வெளியே எட்டிப் பார்க்கிறதா? இந்த தொப்பையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்துள்ளீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லையா? கவலைப்படாதீர்கள்.
இங்கு தமிழ் போல்ட்ஸ்கை தொப்பையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புத பானத்தை உங்களுக்காக கொடுத்துள்ளது.
நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…!
இந்த பானத்தில் உடலை சுத்தம் செய்ய உதவும், அதே சமயம் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், இந்த ஜூஸை தினமும் குடித்து வர, உங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறைந்து, சிக்கென்று மாறலாம்.
மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!! சரி, இப்போது தொப்பையை வேகமாக கரைக்க உதவும் அந்த ஜுஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் நன்மைகளையும், அந்த ஜூஸை எப்படி செய்வதென்றும் பார்ப்போம்.
செய்முறை…
முதலில் இஞ்சியை கற்றாழை ஜூஸில் போட்டு கிளறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
பின் அதில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து சேர்த்து கலந்து, 5 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும்.
Average Rating