சிக்கா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

Read Time:1 Minute, 36 Second

hykuசிக்கா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் சகல பிரேசில் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசெவ் தெரிவித்துள்ளார்.

நுளம்பின் மூலம் தொற்றும் இந்த நோய் காரணமாக சிசுக்கள் குறைபாட்டைக் கொண்டுள்ளவர்களாக பிறக்கின்றனர்.

இந்த நிலையில் தேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

இது வரை இந்த தொற்று காரணமாக 270 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இது தவிர, மூன்றாயிரத்து 448 பேர்கள் மீது இது தொடர்பான விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த வருடம் பிரேசிலின் தலைநகர் ரியோ டீ ஜெனீரோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொற்று குறித்த அச்சத்தை முற்றாக அகற்ற பிரேசில் பல வழிகளிலும் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த நோயினால் இலங்கைக்கு பாதிப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய எதிர்கட்சி புறக்கணிப்பு…!!
Next post யானையிடம் இருந்து தப்பித்து நாகப்பாம்பிடம் உயிரை விட்ட வாலியர்…!!