புலிகளின் முன்னாள் ஊடக பிரதானி தன்னின சேர்க்கையாளரா?.. தயாமாஸ்டருக்கு நடந்தது என்ன…?

Read Time:4 Minute, 45 Second

timthumbயாழில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் பணியாளராக கடமையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் என்று கூறும் அ.ஜெயசந்திரன் நிர்வாகத்தினால் உடனடி அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அண்மைக்காலமாக இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் கட்சி ஒன்றின் முன்னாள் அமைச்சர் ஒருவரை குறிப்பிட்டு அவர் மூலமாக அத்தொலைக்காட்சியில் பணியாற்ற நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.

தன்னை டான் தொலைக்காட்சியின் பிரதி பணிப்பாளர் என வெளியுலகத்திற்கு காட்டிய அ.ஜெயச்சந்திரன் பல்வேறு அதிகார துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம் (28) மது போதையில் டான் தொலைக்காட்சி உள்ள இடத்திற்கு சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அத்தொலைக் காட்சியின் மத்தியகுழுவினால் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்”…. எனும் செய்தியை சில மணித்தியாலங்களுக்கு முன்னர் நாம் பிரசுரித்து இருந்தோம்.

நாம் பிரசுரித்த செய்தியை நிரூபிக்கும் வகையிலும், மேலும் பல தகவல்களை, தனது முகநூல் மூலம் ஊடகவியலாளர் அந்தோனிமுத்து ஜெயசந்திரன் சற்றுமுன்னர் எழுதி வருகிறார்.

டான் தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் அந்தோனிமுத்து ஜெயசந்திரன், தற்போதைய அதே தொலைக்காட்சி செய்தி பணிப்பாளரும், புலிகளின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளருமான தயாமாஸ்ரரை கடுமையாக முகநூலில் விமர்சித்து வருகின்றார்.

விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக முன்னர் இருந்த தயாநிதி (தயா மாஸ்டர்) “ஒரு ஓரின சேர்க்கையாளர் (சைக்கிள்)” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “இவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் எனவும், அதனை மேற்கொண்டு சிறப்பாக பல மோசடிகளை அரங்கேற்றி வருகின்றார்” எனவும், தேர்தல் காலத்தில் யாழில் உள்ள தமிழ் இராணுவ துணைக் குழுவிடம் பணம் பெற்றார்” எனவும்

அத்துடன் “புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை, காட்டிக் கொடுத்த துரோகியும் இவரே” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமர்சனமானது குறித்த தொலைக்காட்சியில் இருந்து நிறுத்தப்பட்ட அந்தோனிமுத்து ஜெயசந்திரனின் விமர்சனமாக அமைந்துள்ளது.

***யார் இந்த தயா மாஸ்ரர்?…

வேலாயுதம் தயாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட தயா மாஸ்டர், ஆங்கில ஆசிரியர். பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டவர்.

இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன், தலைமையின் அறிவுறுத்தலுக்கு அமைய 2009 ஏப்ரல் 22-ம் தேதி தயாமாஸ்டரும், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜேர்ஜ் என்பவரும் இராணுவத்திடம் சரணடைந்தனர் எனத் தெரிய வருகின்றது.

பிறகு, யாழ்ப்பாணத்தில் இருந்து செயல்படும் ‘டான் டி.வி-யில் வேலைக்குச் சேர்ந்தார். டான் டி.வி-யின் பொறுப்பாளராக இப்போதும் பணி புரிகிறார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி தயா மாஸ்டரும், புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரும் புதுமத்தளான் பிரதேசத்தில் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “மாட்டிறைச்சி அரசியல்”: ஒரு திசை திருப்பும் தந்திரம்..!! -லத்தீஃப் பாரூக்
Next post சிகா வைரஸ் குறித்த ஆலோசிக்க விரைவில் கூடுகின்றது உலக சுகாதர ஸ்தாபனம்…!!