By 30 January 2016 0 Comments

வாரம் ஒருமுறை நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

25-1453725248-2-nethili-fishமீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.

இதற்கு இந்த மீனை சமைத்த பின், அது மென்மையாகிவிடுவதால், இதனை முட்களோடு சாப்பிடுவதால் தான். மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள்!!

பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை சாதாரணமாக நினைத்துவிடாமல், வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வாருங்கள். இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இங்கு நெத்திலி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதைப் படித்து, இந்த மீனின் அற்புதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதய ஆரோக்கியம்

நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.



Post a Comment

Protected by WP Anti Spam