அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் இனி பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷனும் செய்து கொள்ளலாம்…!!

Read Time:4 Minute, 24 Second

b05f3e60-20ff-42e0-a003-06f4ae487205_S_secvpfஅமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் நாடுதழுவிய அளவில் மக்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் அரசின் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் உடல்சார்ந்த அனைத்து நோய்களுக்கும் அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் உள்ளிட்ட அனைத்துவகை சிகிச்சைகளையும் மக்கள் இலவசமாக பெறமுடியும். சிகிச்சைக்கு பின்னர் அந்தந்த மருத்துவமனைகள் அதற்கான கட்டணத்தை நோயாளிகளின் காப்பீட்டு கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ளும்.

இந்நிலையில், அமெரிக்க விமானப்படையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சார்லேன் லாடர்டேல்(55) என்பவர் பிறவியிலேயே ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் கொண்டவராக பிறந்தார். விமானப்படையில் ஒரு ஆணாகவே பணியாற்றிய இவர், பணிஓய்வுக்குப் பின்னர் முழுப்பெண்ணாக மாற விரும்பினார்.

இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பை அகற்றிவிட்டு பரிபூரணமான பெண்ணாக மாறிய சார்லேன் லாடர்டேலுக்கு அளிக்கப்பட்ட அந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்து விட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்த்து சார்லேன் லாடர்டேல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், சார்லேன் லாடர்டேலுக்கு அளிக்கப்பட்டது உயிரைக்காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய சிகிச்சை அல்ல, பிளாஸ்டிக் சர்ஜரியைப் போன்ற அழகுசார்ந்த சிகிச்சையாகும், எனவே, அரசின் சிகிச்சை பட்டியலில் இடம்பெறாத பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷனுக்கான செலவுகளை நாங்கள் ஏற்க முடியாது என்று கோர்ட்டில் தெரிவித்தார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசகர்கள் நடத்திய ஆலோசனையில் அரசின் காப்பீட்டு திட்டத்தில் பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷனும் இடம்பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு சிகிச்சை அளிக்க சில மருத்துவமனைகள் முன்வராத நிலையை போக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சார்லேன் லாடர்டேலுக்கு செய்யப்பட்ட பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷனுக்கான மொத்த தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனம்தான் வழங்க வேண்டும் என அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை உயர்நிலைக்குழு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் சார்லேன் லாடர்டேலைப் போல் பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன் செய்துகொள்ள விரும்பும் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(மேலேயுள்ள படத்தில் முழுப்பெண்ணாக மாறிவிட்ட சார்லேன் லாடர்டேல் காணப்படுகிறார்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணமோசடி புகார்: சென்னையை சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் கைது…!!
Next post கர்ப்பகாலத்தில் பாரசிடமால் மருந்து சாப்பிட்டால் குழந்தையின் உடல் நலத்துக்குகேடு: ஆய்வில் புதிய தகவல்…!!