அகதிகளுக்கு எதிராக முகமூடி அணிந்த கும்பல் ஊர்வலம்- சுவீடனில் அதிகரித்துவரும் பதற்றம்…!!

Read Time:1 Minute, 29 Second

86ce87cb-0a3a-4f92-8ec3-51939079e4dc_S_secvpfசுவிடனில் அகதிகளுக்கு எதிரான மனநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முகமூடி அணிந்த கும்பல் அகதிகளுக்கு எதிராக ஊர்வலம் நடத்தியது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிடனின் மக்கள் தொகை ஒரு கோடியாகும். கடந்த ஆண்டு மட்டும் 163,000 அகதிகள் தஞ்சம் கோரி சுவிடனுக்கு வந்துள்ளனர். இது அந்த நாட்டை சேர்ந்த சிலருக்கு பிடிக்காததால் அவர்கள் அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். சில கும்பல்களை சேர்ந்தவர்கள் அகதிகளை தாக்க போவதாகவும் கூறி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை முகமூடி அணிந்து ஊர்வலம் சென்ற கும்பல் ஒரு அகதி குழந்தையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள சுவிடன் அரசு “ இனவெறிப் பிடித்த சிலர் நமது விதிகளில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்பி வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பு படை வீரர்களை கொண்டு அடக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 45 பேர் பலி…!!
Next post கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை தாங்காமல் 3 மாணவிகள் பலியானார்களா…!!