By 31 January 2016 0 Comments

சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

30-1454150684-2-red-guavaகொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல.

கொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது.

இந்த நிறமி கேரட் மற்றும் தக்காளியில் தான் அதிகம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சிவப்பு கொய்யாவில் தான் அதிகம் உள்ளது.

ஆனால் வெள்ளைக் கொய்யாவில் இந்த கரோட்டீனாய்டு இல்லை.

இதனால் தான் அது வெள்ளை நிறத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை இரண்டும் வெவ்வேறு சுவையைக் கொண்டிருக்கும். மேலும் சிவப்பு கொய்யாவில் வெள்ளை கொய்யாவை விட நீர்ச்சத்து, வைட்டமின் சி அதிகம், சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவை குறைவு.

இப்போது சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளும்.



Post a Comment

Protected by WP Anti Spam