By 13 December 2007

சென்னை பண்ணை வீடுகளில் பெண்களை வசியப்படுத்தும் கேட்டமின் போதை பொருள்: தடை செய்ய போலீஸ் பரிந்துரை

சென்னை திருவான்மிïரில் இருந்து மகாபலிபுரம் வரையிலும், பண்ணை வீடுகளும் தனியார் தங்கும் வீடுகளும் ஏராளமாக பெருகி உள்ளது. 100 சதவீதம் இளம் ஜோடி களை குறி வைத்து செயல் படும் இந்த பண்ணை வீடு களில் டிஸ்கோத்தே, மார்டன் கிக் டான்ஸ் மற்றும் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகள் அரங் கேற்றப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் பெண்கள் தமிழ் கலாச்சாரத் திற்கு கேடு விளைவிக்கும் வகையில் போதையில் மூழ்கி தள்ளாட்டம் போடுகின்றனர். அவர்களை அழைத்து வரும் ஆண் நண்பர்களும் உடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடுகின்றனர். சாதாரண குளிர்பானங்கள் குடிக்கும் பெண்களில் இருந்து உயர்ரக மதுவகைகள் அருந்தும் பெண்கள் வரை யாரும் தங்களுடைய கற்பை பற்றி கவலைப்படாமல் உடலில் இருந்து ஆடை நழுவுவது கூட தெரியாமல் போதையில் விழுந்து கிடப்பது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. கால் சென்டர், பி.பி.ஓ. மற்றும் கம்ப்ïட்டர் சாப்ட்வேர் கம்பெனிகளில் இரவு நேர பணிகளில் கம்ப்ïட்டரே கண் கண்ட தெய்வம் என கண் விழித்து வேலை பார்த்து விட்டு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு களில், பண்ணை வீடு, விடுதிகள், ஓட்டல்கள் போன்ற வற்றில் ஆண்-பெண் வித்தியாச மின்றி போதையுடன் பேயாட்டம் ஆடுகின்றனர். சமீபத்தில் தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் நள்ளிரவில் போதை நடனம் போட்ட ஏராளமான இளம் பெண்களை சுற்றி வளைத்த னர். அவர்களில் பெரும்பா லானவர்கள் அரை நிர்வாண மாக கிடந்தது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. அதில் சில முக்கிய பிரமுகர் களின் வீட்டு பிள்ளைகளும் அடங்குவர் என்பதால் விஷ யத்தை போலீசார் பெரிதாக்க வில்லை.

இந்த ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பெண்களுக்கு மது, குளிர்பானத்துடன் `கேட்டமின்’ என்ற மருந்து பொருள் போதைக்காக கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே பெண் கள் தங்களுக்கு, என்ன நடக்கிறது என்பதை உணர முடி யாத நிலைக்கு தள்ளப்பட்ட தாகவும் தகவல் கிடைத்தது.

இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் நடக்கும் விருந்து நிகழ்ச்சி களில் குளிர்பானத்தில் கேட்டமின் போதை பொருள் கலந்து கொடுப்பது சர்வ சாதாரணமாக நடக்கும் என ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரி வித்தார்.

அதுபற்றி மேலும் கூறியதாவது:-

வாலிபர்கள், தங்களது பெண் தோழிகளுடன் பார்ட்டி களில் பங்கேற்கும்போது, ஒட்டி உரசி ஆடுவது இயல் பானது. அதே வேலையில் அவர்கள் கேட்டுக் கொள்ளும்பட்சத்தில் மதுபானத்திலும், குளிர்பானத் திலும் கேட்டமின் என்ற போதை பவுடர் கலந்து கொடுக்கப்படும். இது மூளைக்கு சுறு சுறுப்பை கொடுத்து உடம்பில் உள்ள நரம்புகள் வேகம் ஏற்பட்டு செக்ஸ் உணர்வை தூண்டும் சக்தி கொண்டது.

பார்ட்டி முடியும் தரு வாயில் இதை அருந்தும் பெரும் பாலான பெண்கள் ஆண் நண்பர்களுடன் உல்லா சம் அனுபவிக்க உணர்ச்சு தூண்டுதலுக்கு ஆளாகின்றனர். கற்பு பறி போவது தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றனர். இதனால் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் வருந்தி கதறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களை வசியப்படுத்தி அவர்களது வாழ்வை சீரழிக் கும் நடவடிக்கைக்கு மூல காரணமாக இருக்கும் `கேட்டமின்’ போதை பொருளை வைத்திருந்தால் நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்ப தால் போலீசாரால் தடுக்க இயலவில்லை.

இதுபற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பி ரண்டு டேவிட்சன் நிருபரிடம் கூறியதா வது:-

`கேட்டமின்’ என்ற வெள்ளை நிற பவுடர் இது ஆபரேசன் செய்வதற்கு முன்பு நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு கொடுத்து மயக்கமடைய செய்யும் மருந்து பொருள். இதை ஹாங்காங், மலேசியா போன்ற வெளிநாட்டில் போதை பொருளாக பயன்படுத்துகின்றனர்.

தற்போது சென்னையில், கேட்டமின் பவுடரை குளிர் பானத்தில் கலந்து வாலிபர்கள் போதையாக பயன்படுத்துவ தாக புகார்கள் எழுந்துள்ளது. கஞ்சா, அபின், ஹெராயின் போல கேட்டமின் தடை செய் யப்பட்ட போதை பொருள் கிடையாது. எனவே, இதை பயன்படுத்துவோர் மீது நடவ டிக்கை எடுக்க இயலாது. இதை உபயோகிப்பதால் குற்றங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

எனவே தடை செய்யப்பட்ட போதை பொருள் பட்டியலில், கேட்டமினையும் சேர்க்க போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுவரை கேட்டமின் தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார்கள் ஏதும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.Comments are closed.