By 1 February 2016 0 Comments

பாடசாலைக்கு தினமும் ஹெலிகொப்டரில் சென்று வந்த கோடீஸ்வரரின் மகள்…!!

xv cvcvcகல்வி கற்பதற்கு தினமும் ஹெலிகொப்டரில் சென்றுவரும் மாணவ, மாணவிகள் குறித்து கேள்விப்பட்டி ருக்கிறீர்களா?

பிரிட்டனில் வசிக்கும் கோடீஸ்வரர் ஒருவரின் மகள் இவ்வாறு ஹெலிகொப்டரில் பாடசாலைக்குச் சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரான ரொமன் அப்ரமோவிச்சின் மகள் சோபியா அப்ரமோவிச்தான் இம் மாணவி.

மில்ஹவுஸ் எல்.எல்.சி. எனும் ரஷ்ய தனியார் முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் இவர். கடந்த வருடம் அவரின் சொத்து மதிப்பு 780 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 110,744 கோடி ரூபா) என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டிருந்தது.

ரஷ்யாவின் 12 ஆவது மிகப் பெரிய கோடீஸ்வரரான ரொமான் அப்ரமோவிச், உலகின் 137 ஆவது மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆவார்.

இங்கிலாந்தின் முன்னிலை கால்பந்தாட்ட அணிகளில் ஒன்றான செல்ஷி கழகத்தின் உரிமையாளர் என்ற வகையில் சர்வதேச ரீதியில் அறியப்பட்டவர் இவர். தனது குடும்பத்தினருடன் இவர் லண்டனில் வசிக்கிறார்.

49 வயதான ரொமன் அப்ரமோவிச் 3 தடவைகள் திருமணம் செய்தவர்.

முதல் தடவையாக ஓல்கா யுரெவ்னா லிசோவா என்பவரை 1987 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்தார்.

1990 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்துச் செய்தனர். 1991 ஆம் ஆண்டு ஐரினா மெலன்டினா என்பவரை அப்ரமோவிச் திருமணம் செய்து 2007 வரை இணைந்து வாழ்ந்தார்.

இறுதியாக 2009 ஆம் ஆண்டு டேரியா டேஷா ஸுகோவா (34) என்பவரை அவர் திருமணம் செய்தார்.

ரொமன் அப்ரோமாவிச்சுக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ஐவர் ஐரினா மெலின்டினா மூலம் பிறந்தவர்கள்.

அவர்களில் ஒருவர்தான் சோபியா அப்ரமோவிச் (21) அவரின் தாயார் ஐரினா மெலன்டினா விவாகரத்து பெற்றபோது அவரின் தந்தை ரொமன் அப்ரமோவிச் லண்டனிலுள்ள இரு பெரிய மாளிகைகளை ஐரினாவுக்கு வழங்கினார்.

சசெக்ஸ் பிராந்தியத்தில் 425 ஏக்கர் காணியுடனான மற்றொரு மாளிகை, 15 கோடி ஸ்ரேலிங் பவுண்ஸ் (சுமார் 3032 கோடி ரூபா) பணம் ஆகியனவும் விவாகரத்து உடன்பாட்டின்படி ஐரினாவுக்கு வழங்கப்பட்டன.

தனது தாயாருக்குச் சொந்தமான லண்டனிலுள்ள மாளிகைகளில் வசிக்கும் சோபியா பிரிட்டனிலுள்ள பெரும் கோடீஸ்வரரான பதின்மர் வயது யுவதிகளில் ஒருவராக விளங்குகிறார்.

‘போர் அடித்தால்’ அடிக்கடி தனது நண்பிகளுடன் பிரத்தியேக விமானத்தில் உல்லாசப் பயணம் சென்று வருபவர் இவர்.

தற்போது சர்ரே பிராந்தியத்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்று வரும் சோபியா குண்டுதுளைக்காத காரில் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் சென்று வருகிறார்.

ஆனால், முன்னர் இவர் பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் தினமும் ஹெலிகொப்டரில் பயணம் செய்வாராம்.

இது சோபியாவின் உல்லாசத்துக்காகவோ, ரொமன் அப்ரமோவிச்சின் செல்வச்செழிப்பை வெளிப்படுத்துவதற்காக அல்ல.

சோபியாவை எவரும் கடத்திச் செல்லக்கூடும் என்ற அச்சத்தால் ஹெலிகொப்டரில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரின் தந்தை செய்திருந்தாராம்.

சோபியாவின் தாயாரான ஐரினா மெலடின்னா செவ்வியொன்றில் இது தொடர்பாக கூறுகையில், “ரொமன் அப்ரமோவிச்சுடனான எனது வாழ்க்கை கற்பனைக் கதைகளில் வருவதைப் போன்று (முற்றிலும் உல்லாசமானதாக) இருக்கவில்லை.

எனதும் எனது பிள்ளைகளினதும் பாதுகாப்புக்காக மெய்ப் பாதுகாவலர் குழுவொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

எமது தொலைபேசி இலக்கங்கள் மூலம் எம்மை எவரும் பின் தொடர்வார்கள் என்பதற்காக, நாம் வாராந்தம் ஒரு தடவை தொலைபேசி இலக்கங்களை மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.

இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தை எவரும் கண்டறிய முடியாதிருக்கும். கடத்தல் முயற்சிகள் குறித்து நாம் மிக அச்சம் கொண்டிருந்தோம்.

எனினும் எமது பிள்ளைகளுக்கு யதார்த்தமான வாழ்க்கையை நாம் மறைக்க விரும்பவில்லை.

எனவே தியேட்டர்கள், நூதனசாலைகளுக்குச் செல்லும்போது பெரும் எண்ணிக்கையான மெய்ப் பாதுகாவலர்கள் சகிதம் நாம் சென்றுவருவோம்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

Protected by WP Anti Spam