ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே குண்டு வெடிப்பு…!!

Read Time:2 Minute, 9 Second

9d8f0352-2338-40a0-b0a3-9ace5e817cd7_S_secvpfஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள டே மஸாங் பகுதியில் பாராளுமன்றத்தின் அருகே இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 84 ஏக்கர் நிலபரப்பில் 90 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியாவால் கட்டித்தரப்பட்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறந்துவைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த பாராளுமன்றத்தின் அருகே இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தை தரைமட்டமாக்கும் வகையில் தீவிரவாதிகள் ஒன்பது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுதவிர கடந்த மாதம் உள்ளூர் செய்தி சேனலில் பணியாற்றும் சிலர் மினி பஸ் ஒன்றில் பாராளுமன்றத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டிவந்த தீவிரவாதி, மினி பஸ் மீது காரை மோதி வெடிக்க செய்தான். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த பஸ்சில் இருந்த பத்திரிகையாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த குண்டு வெடிப்பின் போது அந்த பகுதியில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது பெயர் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பையை அணிந்திருந்த 5 வயது ஆப்கான் சிறுவனை சந்திக்க விரும்பும் மெஸ்சி…!!
Next post கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போல் வளர்ந்திருக்கும் மருக்கள்: வங்காளதேச வாலிபரின் சோகக்கதை..!!