By 2 February 2016 0 Comments

திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி நகை பறித்தவர் கைது…!!

8889பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவர்களிடம் இருந்து நகைகளைக் கொள்ளையிட்டதாக கூறப்படும் ஒருவர், களுத்துறை – நாகொட வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இரண்டு கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், பல்வேறு பகுதிகளில் பெண்களை ஏமாற்றி தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற, தகவல் தெரியவந்துள்ளது.

களுத்துறை, மாத்தறை, வாத்துவ, பொரலஸ்கமுக, காலி, மொரட்டுவை, பானதுறை, வெல்லவத்தை, நாரஹேன்பிட உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெண்களிடம் சந்தேகநபர் பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



Post a Comment

Protected by WP Anti Spam