சட்டவிரோத அணு ஆயுத சோதனைகளை கண்டுபிடிக்க புதிய மென்பொருள்…!!

Read Time:2 Minute, 1 Second

dfd4c36e-f4c8-4f86-8f09-5b8012f4c7c7_S_secvpfதற்போது உலக நாடுகளிடம் இருக்கும் ஆணு ஆயுதங்களை கொண்டு நாம் வசிக்கும் பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும். ஏற்கனவே சர்வாதிகார ஆட்சியை கொண்ட நாடுகளிடமும், நிலையான ஆட்சியமைப்பு இல்லாத சில நாடுகளிடம் அணு ஆயுதங்கள் குவிந்து கிடப்பது அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில் தீவிரவாத அமைப்புகளிடம் அணு ஆயுதங்கள் சிக்கும் நிலை உருவாகிவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை முதலில் கண்டறிந்து ஒரு சமூக நல அமைப்பு. சி.டி.பி.டி.ஒ.(CTBTO) என்ற அந்த அமைப்பு அமெரிக்காவை சேர்ந்த எரிக் சுத்தேர்த் என்ற பேராசிரியரால் உருவாக்கப்பட்டது.

உலகம் முழுவதும் 149 இடங்களில் நில அதிர்வு உணர்வு நெட்வொர்க் மையங்களை அமைத்துள்ளது சி.டி.பி.டி.ஒ.. தற்போது இந்த அமைப்பு விசா என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அணு ஆயுத சோதனைகள் வழியாக மனிதர்களால் உருவாக்கும் நில அதிர்வுகள் பற்றி விபரங்கள் துல்லியமாக தெரிந்துக்கொள்ள முடியும்.

உலகில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான சட்டவிரோத அணு வெடிப்பு சோதனைகளும் மறைக்கப்படாமல், பொது மக்களின் பார்வைக்கு வரவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது சி.டி.பி.டி.ஒ. அமைப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்: ஒருவர் காயத்துடன் உயிர் தப்பிய விமானிகள்…!!
Next post செல்போன் வெடித்து சிறுவன் கண்கள் பாதிப்பு: எழும்பூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை…!!