அமெரிக்கவின் அடுத்த அதிபர் வேட்பாளர்கள் யார்..!!

Read Time:3 Minute, 12 Second

americaஅமெரிக்க அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் தரப்பில் முதல்கட்ட உட்கட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியில் டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸும் முன்னிலைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி தரப்பில் 15 பேரும் குடியரசு கட்சி தரப்பில் 31 பேரும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் யாரை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து இரு கட்சிகளிலும் மாகாண வாரியாக பலகட்ட உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதில் முதல் மாகாண மாகலோவாவில் நேற்று உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

ஆளும் ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 50 சதவீத வாக்குகளும் 22 பிரதி நிதித்துவ வாக்குகளும் பெற்று முன்னிலை பெற்றார்

அவருக்கு அடுத்து வெர்மாண்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் 50 சதவீத வாக்குகளும் 21 பிரதிநிதித்துவ வாக்குகளையும் பெற்றார்.

எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸ் 28 சதவீத வாக்குகள் 8 பிரதிநிதித்துவ வாக்குகளுடன் முன்னிலை பெற்றார்.
அவருக்கு அடுத்து கட்சியின் மூத்த தலைவர் டோனால்டு டிரம்ப் 24 சதவீத வாக்குகள் 7 பிரதிநிதித்துவ வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார்.

அடுத்த கட்டமாக இரு கட்சிகளிலும் 12 மாகாணங்களுக்கான உட்கட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி;நடைபெறுகிறது.

இதில் முன்னிலை பெறும் வேட்பாளர்களே இரு கட்சிகளின் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்று தெரிகிறது

ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து மாகாணங்களிலும் உட்கட்சித் தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெறும்

அதன்பின்னர் ஜூலையில் இரு கட்சிகளின் தரப்பில் மாநாடு நடத்தப்பட்டு கட்சிகளின் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறி விக்கப்படுவார்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு சுதந்திரமே இல்லை…!!
Next post இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு இந்தியா செல்லத் தடையுத்தரவு..!!