சீனாவில் கடும் பனிப்பொழிவு: ரெயில் நிலையத்தில் 50 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பு…!!

Read Time:1 Minute, 50 Second

9d929768-0f73-4b75-8df1-b85b59dffbb8_S_secvpfசீனாவில் குளிர்காலமான தற்போது வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் கடுமையாக பனி கொட்டுகிறது.

இதனால் அங்கு பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சீன போக்குவரத்தில் ரெயில் முதலிடம் வகிக்கிறது.

ஏராளமான அதிவேக ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பொதுமக்கள் விரும்பி பயணம் செய்கின்றனர். தற்போது அங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குவான்ஷு மற்றும் ஷென்செங்கில் இருந்து 27 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டது.

குவான்ஷுவில் இருந்து மட்டும் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தினசரி பயணம் செய்கின்றனர். அவர்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கி கொண்டனர்.நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது. 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட ‘கியூ’ வரிசையில் காத்திருந்தனர். எனவே, மக்களின் கூட்டத்தை கட்டுப் படுத்த 6,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் மாமியாரை கொன்ற இந்திய மருமகளுக்கு ரூ.7 கோடி அபராதம்…!!
Next post பாதுகாப்பு அதிகாரிகள்–ஊழியர்கள் இடையே பாகிஸ்தான் விமான நிலையத்தில் மோதல்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…!!