தான் ஒரு பூனை என நம்பும் நோர்வே பெண் எலி பிடிக்கவும் முயற்சிக்கிறாராம்..!!

Read Time:2 Minute, 36 Second

fgghநோர்வேயைச் சேர்ந்த யுவதியொருவர் தன்னை ஒரு பூனையாகக் கருதுகிறார். எலிகளை பிடிக்கவும் இவர் முயற்சிக்கிறாராம்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வசிக்கும் இந்த யுவதியின் பெயர் நனோ. 20 வயதான இவர், தான் மனித உடலில் சிக்கிக் கொண்ட ஒரு பூனை என நம்புகிறார்.

தனது 16 ஆவது வயதிலேயே தான் ஒரு பூனை என அவர் முதன்முதலாக உணர்ந்தாராம். அவர் மரபணு கோளாறொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

பின்னர், பூனைகளைப் போன்றே அவரின் நடவடிக்கைகள் அமைந்தனவாம். பொதுவாக, நாய்க்கும் பூனைக்கும் பகையல்லவா? நனோவுக்கும் நாய்களைப் பிடிக்காது. நாய்களின் அருகில் சென்றால் அவரும் ஒரு பூனையைப் போன்று சீறுவாராம்.

“நான் தண்ணீரை வெறுக்கிறேன். வீதியில் நடக்கும் போது நாய்கள் அருகில் வந்தால் சிலவேளை, சீறுகிறேன். எனது உள்ளுணர்வின் காரணமாக இப்படி ஏற்படுகிறது. நாய்களைக் கண்டால் சீற வேண்டும் என எனது உள்ளுணர்வு சொல்கிறது” என்கிறார் நனோ.

தான் தவறான இனத்தில் பிறந்துவிட்டதாக நனோ கருதுகிறார். இந்த மனோபாவத்திலிருந்து அவர் விடுபட முடியும் என உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தனது வாழ்க்கை முழுவதும் பூனையாகவே வாழ விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எப்போதாவது எலியைப் பிடித்திருக்கிறீர்களா?” என நனோவிடம் செவ்வியொன்றில் கேட்கப்பட்டது. “நான் எலி பிடிக்க முயற்சித்திருக்கிறேன். அதில் எனக்குத் தோல்வியே கிடைத்தது. ஆனால், நான் ஒரு பூனை என்பது வெளிப்படையாது.

பூனைகளைப் போன்றே நான்கு கால்களில் நடக்க விரும்புகிறேன். சமையலறை சின்க், ஜன்னல் கட்டு ஆகியவற்றில் உறங்கவும் விரும்புகிறேன்” என நனோ தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவீதியில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பெண்…!!
Next post ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி மில்லியன் கணக்கானோரை வசீகரித்த நடிகை…!!