தலிபான் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தனது கிரா­மத்தை பாது­காக்க ஆயுதம் ஏந்திப் போரா­டிய 10 வயது சிறுவன்..!!

Read Time:3 Minute, 39 Second

sfddதலிபான் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தனது கிரா­மத்தைப் பாது­காக்க உத­வி­யதன் மூலம் வீரச் சிறு­வ­னாக கௌர­விக்­கப்­பட்ட ஆப்­கா­னிஸ்­தானைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அந்த தீவி­ர­வா­தி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளான்.

உருஸ்கான் பிராந்­தி­யத்தின் தலை­நகர் திறின் கொட்டில் வைத்து வாஸில் அஹ்மெட் கொல்­லப்­பட்­டுள்ளான். தீவி­ர­வா­திகள் மேற்­படி சிறு­வனின் தலையில் இரு தட­வைகள் சுட்டு அவனைப் படு­கொலை செய்­துள்­ளனர்.

மேற்­படி சிறுவன் தனது மாம­னா­ருடன் இணைந்து தலிபான் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போரா­டி­யுள்ளான். அவன் சீரு­டையும் தலைக் கவ­சமும் அணிந்து தன்­னி­யக்க துப்­பாக்­கி­யுடன் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் சமூக இணை­யத்­த­ளங்­களில் வெளி­யா­கி­ய­தை­ய­டுத்து அவன் உல­க­ளா­விய பிர­ப­லத்தைப் பெற்­றி­ருந்தான்.

இந்­நி­லையில் தலிபான் தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்­த­வர்கள் என நம்­பப்­படும் இனந்­தெ­ரி­யாத துப்­பாக்­கி­தா­ரிகள் வாஸில் அஹ்­மெட்டை அவ­ரது வீட்­டிற்கு அருகில் வைத்து துப்­பாக்­கியால் சுட்­ட­தாக உருஸ்கான் பிராந்­திய பிரதி பொலிஸ் தலைவர் ரஹி­முல்லாஹ் கான் தெரி­வித்தார்.

அந்த சிறுவன் தனது தந்தை தலிபான் தீவி­ர­வா­தி­க­ளு­ட­னான போராட்­டத்தில் மர­ண­மா­ன­தை­ய­டுத்து அந்தத் தீவி­ர­வா­தி­களால் தமது கிராமம் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வதை தடுக்க கிரா­ம­வா­சி­க­ளுடன் இணைந்து போரா­டி­யி­ருந்தான்.

அவ­னது வீரச் செயலை உள்ளூர் பொலிஸார் பாராட்டிக் கௌர­வித்­துள்­ளனர்.

அதே­ச­மயம் ஆப்­கா­னிஸ்தான் சுதந்­திர மனித உரி­மைகள் ஆணை­ய­க­மா­னது அந்தச் சிறு­வனின் மர­ணத்­துக்கு தலிபான் தீவி­ர­வா­திகள் மட்­டு­மல்­லாது அவனை ஆயுதம் ஏந்­து­வ­தற்கு ஊக்­கு­வித்த அவ­னது குடும்­பத்­தி­னரும் அர­சாங்­கமும் காரணம் என குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

அந்த சிறுவன் கிராம மக்­களைப் பாது­காக்க அல்­லாது தனது தந்­தை யின் மர­ணத்­துக்கு பழி தீர்க்க மேற்­படி போராட்­டத்தில் இணைந்­திருக்க வாய்ப்­புள்­ள­தாகவும் இந்­ நி­லையில் பொலிஸார் இதனை சட்­ட­வி­ரோ­த­மான நட­வ­டிக்­கையாக கரு­தாது சிறுவனைப் பாராட்டி ஊக்குவித்து பிரபலப்படுத்தி அவனை தலிபான்கள் அடையாளம் கண்டு தாக்குதல் நடத்துவதற்கு வழிவகை செய்துள்ளதாகவும் அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் ஆயுதங்களை ஏந்துவது சட்டவிரோதமானதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து சாவகச்சேரியில் இடைமறிப்பு…!!
Next post முன்னாள் எம்.பி வீட்டில் திருடியதாக 4பேர் கைது!- காட்டிக்கொடுத்தது மோப்பநாய்..!!