ஸிக்கா வைரஸ் தொடர்பான கண்கானிப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்…!!

Read Time:1 Minute, 54 Second

rrrஸிக்கா வைரஸ் தொடர்பான கண்காணிப்பின் நிமித்தம் நாடுபூராகவும் சிறிய பருமனுடைய தலைகளுடன் பிறக்கும் குழந்தைகள் குறித்து அறிக்கையிடவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த அறிக்கையிடல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் குடும்ப நல சுகாதார பிரிவின் பொது சுகாதாரதுறை விசேட வைத்திய நிபுணர் கபில ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுற்றுநிரூபத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுனர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு காரணங்களுக்காக சிறிய பருமனுடனான தலையுடன் குழந்தைகள் பிறந்தாலும், இந்த நிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஸிக்கா வைரஸ் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் குடும்ப நல சுகாதார பிரிவின் பொது சுகாதாரத் துறை விசேட வைத்திய நிபுணர் கபில ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரத்­பொன்­சேகா நாளை எம்.பி. யாக பதவியேற்பு…!!
Next post சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை “கட்டார் விமான சேவைக்கு” : உண்மையில்லை…!!