விடுதலைப்புலிகளுக்கு வட கொரியா ஆயுத உதவி

Read Time:3 Minute, 16 Second

l-t-t-e.gifவிடுதலைப்புலிகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் வட கொரியா ஆயுதங்களை வழங்கியிருக்கக் கூடுமென அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸுக்கான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது பயங்கரவாத நாடுகள், அமைப்புகளின் பட்டியலிலிருந்து வட கொரியாவை நீக்கிவிடும் அமெரிக்காவின் திட்டத்தை சிக்கலானதாக்கி விடும் என்று தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆய்வுச் சேவையால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த புதன்கிழமை ராய்ட்டருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆய்வுச் சேவையானது அமெரிக்க காங்கிரஸுக்கு (பாராளுமன்றம்) சுயாதீனமான ஆய்வுகளையும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து வருகிறது. வாஷிங்டன் பயங்கரவாத அமைப்புகள் என்று கருதும் போராளிக் குழுக்களுக்கு வட கொரியா ஆயுதங்களை விநியோகித்துள்ளதுடன் சாத்தியமான பயிற்சிகளையும் அளித்திருப்பதாக காங்கிரஸுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையான வட்டாரங்களை மேற்கோள் காட்டியே காங்கிரஸ் ஆய்வுச் சேவை இந்த விபரத்தை தெரிவித்திருக்கிறது. வட கொரியா அணு ஆயுத தயாரிப்புத் திட்டங்களை முழுமையாக கைவிட இணங்கினால் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வட கொரியாவை அமெரிக்கா நீக்கிவிடுவதற்கான சாத்தியம் காணப்பட்டது.

1987 இற்குப் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வடகொரியா அனுசரணை வழங்கியதாக தெரியவில்லை என்றே காங்கிரஸ் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வட கொரியா விடுதலைப்புலிகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் சாத்தியமான அளவு பயிற்சிகளை அளித்திருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜப்பான் பத்திரிகையான ்சங்கேய் சிம்புன்ீ 2007 செப்டெம்பரில் வட கொரியா புலிகளுக்கு கப்பலில் ஆயுதங்களை விநியோகித்ததாக செய்தி வெளியிட்டிருந்ததாக காங்கிரஸ் ஆய்வுச் சேவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாயைக் கடித்த மனிதன்
Next post கம்பஹாவில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்