பூட்டிய வீட்டிற்குள் பிணம் தாய்- குழந்தைகள் தற்கொலை ஏன்?- புதிய தகவல்கள்

Read Time:4 Minute, 8 Second

சேலம் பொன்னம்மா பேட்டை செங்கல் அணை ரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது இரண்டாவது மனைவி கோமதி (32). இவர் களுக்கு புவனேசுவரி (7), கார்த்தி (4), கவுசல்யா (2) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். முதல் மனைவி ஜெயா மூலம் பிறந்த மோகன் (18) என்ற மகனும் இவர்களுடன் தான் வசித்து வந்தான். சண்முகம் வெள் ளிப்பட்டறை வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த கோமதி, தனது குழந்தைகள் கார்த்தி மற்றும் கவுசல்யா ஆகியோர் மீது பெட்ரோல் மற்றும் மண் எண்ணை ஊற்றி தீ வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். கோமதி வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக கரும்புகை வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அம்மாபேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கருணா நிதி தலைமையில் போலீ சார் வந்து தீயில் கருகி கரிக்கட்டையாக கிடந்த 2 குழந்தைகள் மற்றும் தாயின் பிணங்களை கைப்பற்றினர். கோமதியின் கணவர் சண்முகத்தை போலீசார் பிடித்துச்சென்று விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். அப்போது சண்முகம் கடன் தொல்லையால் தனது மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக கூறினார். சண்முகத்தின் முதல் மனைவி ஜெயாவும் ஏற்கனவே தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர் திராவகம் தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது.

முதல் மனைவி இறந்த பிறகு கோமதியை காதலித்து கடந்த 19.3.2001-ல் திருமணம் செய்து கொண்டார். இவர் களுக்கு புவனேசுவரி, கார்த்தி, கவுசல்யா என்ற 3 குழந்தைகள் இருந்தனர். முதல் மனைவி மூலம் பிறந்த மோகன் (18) என்ற மகனும் இவர்களுடனே வசித்து வந்தான். மோகன் வேலைக்கும், புவனேசுவரி பள்ளிக்கும் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் உயிர் பிழைத்துவிட்டனர்.

சண்முகம் வெள்ளிப்பட் டறை நடத்தி வந்ததில் ரூ.80 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை சரிக்கட்ட ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் கோமதியின் பெற்றோரிடம் பணம் வாங்கி ரூ.60 ஆயிரம் கடன் கட்டி விட்டார். மீதி ரூ.20 ஆயிரம் கடன் இருந்தது. இந்தக் கடனை கட்ட முடியாமல் தவித்த அவர் புதிய பஸ் நிலையம் அருகே அண்ணாத்துரை என்பவர் நடத்தும் வெள்ளிப் பட்டறைக்கு வேலைக்கு போனார்.

அங்கு அவருக்கு தினமும் ரூ.120 சம்பளம் கொடுத்தார்கள். வீட்டு வாடகையாக மாதம் ரூ.1500 மேலும் கொடுத்து வந்தார். அந்த சம்பளத்தை வைத்து 4 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டார். கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டதோடு, வறுமை யும் வாட்டியது. இதனால் கோமதி, 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது.

திருமணமான 7 வருடத்தில் கோமதி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்ததால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தாரா? என்று சேலம் ஆர்.டி.ஓ. காஜா மொய்தீன் விசாரணை நடத்துகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குடிசை வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கள்ள தொடர்பை கண்டு பிடித்த கணவன்: கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
Next post ஓமலூரில் காதலி வீட்டில் சிறை வைக்கப்பட்டதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை