அமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்…!!

Read Time:1 Minute, 40 Second

475dbf1b-2417-4ca7-af1d-7b93b7b75194_S_secvpfஅமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் நடந்தது.

எச்.ஐ.வி. கிருமி தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகள் உடல் நலமுள்ள மற்றவர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து வந்தனர். இதனால் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 22 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் மாற்று உடல் உறுப்புகள் கிடைக்காமல் காத்து இருக்கின்றனர்.

எனவே, அக்குறையை போக்க எய்ட்ஸ் நோயாளியிடம் இருந்து உறுப்பு பெற்று பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிக்கு பொருத்த ஜான்ஸ் ஹோப் கின்ஸ் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து எய்ட்ஸ் நோய் தாக்கியவருக்கு அதே நோய் தாக்கியவரிடம் இருந்து சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தானமாக பெற்று ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது. அமெரிக்காவில் முதன் முறையாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் ஆண்டுக்கு 500 முதல் 600 எய்ட்ஸ் நோயாளிகளின் வீணாகும் உடல் உறுப்புகள் சராசரியாக 1000 பேரின் உயிரை காக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏமனில் உச்சகட்ட தாக்குதல் நடத்த சவுதி முடிவு: ஐ.நா. குழுவினரை வெளியேறுமாறு எச்சரிக்கை…!!
Next post பஸ் தின ஊர்வலத்தில் மோதல்–கல்வீச்சு: நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது…!!