By 19 February 2016 0 Comments

டெஸ்ட் டியூப் குழந்தைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!

18-1455789103-1-factsabouttesttubebabies-300x225குழந்தையின்மை சிகிச்சையில் மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி காரணமாக டெஸ்ட் டியூப் சோதனைக் குழாய் அல்லது குழந்தை முறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

IVF அல்லது ICSI எனப்படும் சிகிச்சை முறைகளும் இனப்பெருக்க உயர் சிகிச்சை முறைகளாகும். இவை தற்போது குழந்தையின்மை சிகிச்சைகளில் முக்கிய பங்காற்றுகின்றன.

ஒரு பெண்ணும் ஆணும் சாதாரணமாக இணைந்து பிறக்கும் முறையில் அல்லாமல் ஒரு பெண்ணின் கருமுட்டைக்குள் நேரடியாக ஆணின் விந்தணுவை ஊசி மூலம் செலுத்துவதன் மூலம் கரு உருவாக்கம் நடைபெறுகிறது.

இதுப்போன்று உயர் சிகிச்சை முறைகள் கண்டுப்பிடிக்கப்படுவதற்கு முன் டெஸ்ட் டியூப் குழந்தை என்ற சொல் செயற்கை முறை கருத்தரித்தலை குறிப்பதாக இருந்தது.

டெஸ்ட் டியூப் குழந்தையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்ன? நாம் எவ்வளவு தான் முன்னேறிய காலத்தில் இருந்தாலும் இதைப் பற்றிய பல விவரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன.

எனவே இதனைப் பற்றி நாம் மேலும் இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
டெஸ்ட் டியூப் பேபி என பெயர் வந்தது ஏன்?

ஏற்கனவே கூறியதைப் போல IVF அல்லது ICSI முறைகள் மூலம் பிறப்பவை இந்த டெஸ்ட் டியூப் குழந்தைகள். கருவும் ஆணின் விந்தணுவும் உடம்பிற்கு வெளியில் கருத்தரிக்கச் செய்து உடம்பினுள் வளர்வதற்காக பெண்ணின் கருப்பையில் இடப்படுகின்றன. கருவுறுதல் வெளியில் நடைபெறுவதால் அவை டெஸ்ட் டியூப் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன.
யாருக்கெல்லாம் டெஸ்ட் டியூப் குழந்தைகள் தேவை ஏற்படும்?

சிகிச்சையின் துணையுடன் கருவுறும் முறைகளானது, கருவுறுதலில் சிக்கலைச் சந்திக்கும் அனைத்து தம்பதிகளுக்கும் தேவைப்படும். இது பெண்களின் கருமுட்டைப் பிரச்சனைகள் அல்லது ஆண்களில் விந்தணுக் குறைபாடு ஆகியவற்றால் ஏற்படலாம். IVF சிகிச்சையை எடுத்தவுடனேயே தொடங்காமல் மற்ற சிகிச்சை முறைகள் அனைத்தும் பயன்தராத நிலையில் இதனைப் பயன்படுத்தலாம்

இம்முறையில் எவ்வாறு குழந்தைகள் பிறக்கின்றன?

பல கரு முட்டைகள் பெறப்பட்டு பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படுகின்றன. அதன்பின் வளர்ச்சியடைந்த கருக்கள் வெளியேற்றப்படுகின்றன. கணவனின் விந்தணு பெறப்பட்டு அதில் துடிப்பாக உள்ள அணுக்கள் தேர்வு செய்யப்படுகின்றன. கருவுறும் வழிமுறையில் இவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பெண்ணின் கருப்பைக்குள் இடப்படுகின்றன.

இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் சாதாரணமானவை தானா?

ஆம்.. நிச்சயமாக அவை ஆரோக்கியமானவையும் கூட. இதுவரை நடந்த எந்த ஆய்வும் இந்த முறையில் கோளாறுகள் இருப்பதாக தெரிவிக்கவில்லை. இந்த குழந்தைகள் சாதாரணமாகப் பிறக்கும் எந்த ஒரு குழந்தையைப் போலவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இயலும். இது சோதனைக் குழாய் குழந்தைகளைப் பற்றிய ஏழு உண்மைகளுள் ஒன்று.

டெஸ்ட் டியூப் குழந்தைகள் இனப்பெருக்க வளம் உடையவர்களா?

எல்லோரையும் போலவே இவர்களும் சாதாரணமாகவே வளர்வதுடன் அவர்களின் இல்லற வாழ்விற்கு எந்த குறைவும் இருக்காது. சாதாரணமாகப் பிறப்பவர்களுடன் இவர்களை ஒப்பிடும் போது இந்த விஷயத்தில் இனப்பெருக்கக் குறைபாடுகளுக்கான வாய்ப்பு ஒன்றாகவே உள்ளது.
டெஸ்ட் டியூப் குழந்தைகள் விருப்பம் போல் உருவாக்கப்பட்டவையா?

நிச்சயமாக இல்லை. ஆனால் நவீன அறிவியல் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களின் மூல காரணத்தைக் களையவும், பாலினத்தைத் தேர்ந்தெடுக்கவும் வழி செய்கிறது. ஆனால் இதைத் தவிர நாம் விரும்பியபடி மரபணு மாற்றம் செய்து குழந்தையைப் பெற முடியாது.
சோதனைக் குழாயில் தான் இவை நிஜமாகவே பிறக்கின்றனவா?

எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு தவறான கருத்து இது. உண்மையில் கருவுறுதல் மட்டும் அதற்கென உள்ள பெட்ரி-டிஷ் எனப்படும் கருவி மூலம் அந்த சூழ்நிலைகளை உருவாக்கி தட்பவெப்ப நிலைகளை சிந்தடிக் ஹார்மோன்களைக் கொண்டு செய்யப்படுகிறது. மற்றபடி இந்தக் கரு தாய்க்குள் செலுத்தப்படுகிறது.

என்ன இப்ப புரிஞ்சுதா டெஸ்ட் டியூப் பேபி அப்படின்னா என்னன்னு?Post a Comment

Protected by WP Anti Spam