By 21 February 2016 0 Comments

கிராம சுயராஜ்யங்கள் இலங்கையில் செயற்படுத்தப்படுமா? அறிமுகப்படுத்தப்படும்….!!

timthumbசுயராஜ்யம் என்றால் என்ன?

சுயராஜ்யம் என்பது சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய சுய ஆட்சி என்பது இதன் பொருளாகும். விடுதலை என்பதற்கான ஆங்கிலச் சொல் இருக்கிறதே (Independence) அதைப்போன்று எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பது என்பது அதன் பொருள் அல்ல.

கிராம சுயராஜ்யம் என்பது மைய அரசோ அதிகாரமோ இல்லாத ஒரு கிராமக் கூட்டமைப்புதான்.

ஒரு பண்பாட்டின், தேசத்தின் ஒவ்வொரு அம்சமும் தன்னுடைய சுயத்தைப் பேணி வளர்த்து முழுமையை நோக்கி நகர வேண்டும் என்றும், அதன் ஒட்டுமொத்தமாகவே அந்தப் பண்பாடும் தேசமும் முழுமையை அடைய முடியும் என்றும் காந்தியம் வலியுறுத்தும். குறிப்பாக, செல்வம் மையப்படுத்தப்படுவது என்பது அடக்குமுறையை உருவாக்கும்.

நிற்க, இலங்கையரசியலில் இது தாக்கத்தினையேற்படுத்துமா? அல்லது அரசாங்கம் செய்வதற்கான பொம்மையா? இந்த கட்டமைப்பு இந்தியாவில் தற்பொழுது இக்கட்டமைப்பு அரசியலில் ஒருபக்கம் சார்பாகவா செயற்படுகின்றது?

வன்முறை தவிர்த்தல்

வன்முறையை எதிர்க்க வன்முறை ஒருபோதும் வழியாகாது. அதன்மூலம் எந்த வன்முறையை எதிர்க்கிறோமோ அதற்குச் சமானமான வன்முறையாளர்களாக நாம் உருவாகிறோம். அவர்கள் செய்ததையே நாம் செய்ய ஆரம்பிக்கிறோம். அது இரண்டுமடங்கு வன்முறையை மட்டுமே உருவாக்கும்.

அரசாங்கங்கள் வன்முறையின் வலிமையில் நிலைநிற்பவை அல்ல. அவை அந்த அரசுகளை ஆதரிக்கும் மக்களால் நிலைநிறுத்தப்படுபவை. அந்த மக்களின் கருத்தியல் நம்பிக்கைகளே அவ்வரசுக்கான ஆதரவாக ஆகின்றன. அந்த மக்களின் மனசாட்சியுடன் பேசுவதும் அந்தக் கருத்தியலை முழுமையாக மாற்றுவதும் மட்டுமே அரசாங்கங்களை தோற்கடிக்கும் வழிகள்.

மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஐரோப்பாவில் உருவான அரசியல் சிந்தனைகள் பேரறிஞர்கள் மக்களை வழிநடத்தும்பொருட்டு உருவாக்கியவை. வரலாற்றின் பாடங்களையும் தீர்வுகளையும் நேரடியாக மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.

இயற்கையுடன் இணைந்துபோதல்

பெருந்தொழிலை அடிப்படையாகக் கொண்ட நவீன முதலாளித்துவம் இயற்கையை ஈவிரக்கமில்லாமல் சுரண்டுவதையே தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவம் தேவைக்கேற்ப உற்பத்தி செய்வதில்லை. லாபத்துக்காக உற்பத்தி செய்கிறது. அதன்பின்னர் தேவையை அதுவே உருவாக்கிப் பரப்புகிறது. அதன் விளைவே நுகர்வுக் கலாச்சாரம். நமக்கு என்ன தேவை என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும், உற்பத்தியாளர் அதை நம்மீது ஏற்றக் கூடாது.

இயற்கை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. அதற்கேற்ப ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையையே அமைத்துக்கொள்வதைப் பற்றி பேசுகிறது. தாக்குப்பிடிக்கும் பொருளியலும், நுகர்வு மறுப்பும் அடிப்படைகள்.

தனிமனித நிறைவு

சாராம்சமான தரிசனம் அரசியலோ தொழிலோ கலையோ எதுவானாலும் அது அதில் ஈடுபடுபவனுடைய ஆளுமையை வளர்த்து முழுமைசெய்வதாக இருக்க வேண்டும் என்பது. முழுமையாக அதில் ஈடுபடுவதும் அச்செயல்மூலம் தன்னுடைய அறவுணர்ச்சியையும் ஆன்மிகத் தேடலையும் நிறைவுசெய்துகொள்வதும்தான் அதற்கான வழியாகும்.

ஆகவே, எந்த சிந்தனையும் அதில் ஈடுபடுபவனைச் சிறந்த மனிதனாக ஆக்கவில்லை என்றால் அது பயனற்றதே.

ஆக மொத்தில் காந்தியால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கிராம சுயராஜ்யங்களினை இலங்கையில் செயற்படுத்தப்படுமானால் அதன் போக்கு எவ்வாறு காணப்படும். சுயராஜ்யம் சார்ந்த அறிவுகள் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்குண்டா? வடக்கு கிழக்கில் எவ்வாறு செயற்படும்? கல்வியறிவினை பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுமா? அதற்கான கல்வித்திட்டங்கள் புகுத்தப்படுமா இருந்தாலும் அவர்கள் அங்கும் தங்கள் செயலினைச் செய்வார்களா.?

நன்றி.!Post a Comment

Protected by WP Anti Spam