ஏன் காலையிலும், இரவிலும் கட்டாயம் ஒரு டம்ளர் பால் குடிக்கச் சொல்கிறார்கள் எனத் தெரியுமா…?

Read Time:6 Minute, 39 Second

22-1456118049-2-milkஉடல் ஆரோக்கியமாக செயல்பட, அன்றாடம் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அதற்கு உணவுப் பொருட்கள் தான் உதவி புரியும்.

ஆகவே நாம் ஒருசில உணவுகளை தினமும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அதில் பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர்.

ஆனால் பாலில் நாம் நினைத்து பார்த்திராத அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது. வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எனவே அந்த பாலை ஒருவர் தினமும் காலையிலும், இரவிலும் குடிக்க வேண்டியது கட்டாயம்.

இங்கு ஏன் காலையிலும், இரவிலும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கால்சியம்

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும்.

இப்படி எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைக்காமல் போனால், 30 வயதிற்கு மேல் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் கால்சியம் உடலின் இதர செயல்பாடுகளான தசை சுருக்கம், இரத்தம் உறைதல் போன்றவற்றிற்கும் முக்கியமானது.

பொட்டாசியம்

பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். இச்சத்தும் தசைகளின் சுருக்கத்திற்கு அவசியமானது.

புரோட்டீன்

பாலில் ஏராளமான அளவில் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு வேண்டிய 9 வகையான அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

வைட்டமின் ஏ

கண்களின் ஆரோக்கியத்திற்கும், மென்மையான சருமத்திற்கும் வைட்டமின் ஏ அவசியமானது.

இது செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கும் முக்கியமான ஒன்று.

இத்தகைய வைட்டமின் ஏ சத்து பாலில் அதிகம் உள்ளது.

வைட்டமின் பி

12 பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. மேலும் இது இரத்த உருவாக்கத்திற்கும் அவசியமானது.

வைட்டமின் டி

எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி கட்டாயம் வேண்டும்.

இது பாலில் ஏராளமான உள்ளது. இச்சத்து எலும்புகளின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

பாஸ்பரஸ் மற்றும் ரிபோஃப்ளேவின்

பாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் ரிபோஃப்ளேவின் செல்களில் ஆற்றலை உற்பத்தை செய்ய உதவுகிறது.

இவைகளும் எலும்புகளின் உருவாக்கத்திற்கு அத்தியாவசியமானது.

நியாசின்

நியாசின் நொதிகளின் செயல்பாட்டிற்கும், உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்புக்களை செயல்முறைக்கு உள்ளாக்க உதவுகிறது.

மேலும் இது நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே தினமும் பால் குடிப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

எடை குறைய

சொன்னால் நம்பமாட்டீர்கள், பால் உடல் எடையைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆகவே எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, பால் குடிப்பதைத் தவிர்க்காதீர்கள்.

பசியைக் கட்டுப்படுத்தும்

தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்கள் உண்பதைத் தவிர்க்கலாம்.

இதனால் கண்ட உணவுகளின் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

சிறுநீரக கற்கள் வராது

பலரும் பாலை அதிகம் குடித்தால், அதில் உள்ள கால்சியம் சிறுநீரகங்களில் படிந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் சிகாகோ பல்கலைகழகத்தைச் சேர்ந்த டி.ஆர். வெப் அது தவறு என்று கண்டறிந்துள்ளார். மேலும் அவர்சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்

ஆய்வில் பாலை தினமும் குடித்து வருவதன் மூலம் டைப் 2 நீரிழிவு வரும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பு

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட பாலை தினமும் குடித்தால், உடலில் வரும் பிரச்சனைகள் குறைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே தினமும் பாலைக் குடித்து உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறை பரீட்சை நாளை ஆரம்பம்..!!
Next post மிஹிந்தலை புனித பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை…!!