மங்கள சமரவீர – ஹெலன் கிளார்க் சந்திப்பு…!!

Read Time:1 Minute, 25 Second

367677409UNDPவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி வேலைத்திட்ட (UNDP) பிரதானி ஹெலன் கிளார்க் ஆகியோர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் அபிவிருத்திப் பாதைக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவு நிமித்தம் நாளை நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

1967ம் ஆண்டு தெடக்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி வேலைத்திட்டம் இலங்கையில் தனது பணிகளை செயற்படுத்தி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் பல பாகங்களிலும் வெப்பமான காலநிலை மாற்றம்..!!
Next post பிணம் எழும்பியதால் நடந்த விபரீதம்! (VIDEO)