பாதை தெரியாத அளவுக்கு மூடுபனி ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

Read Time:2 Minute, 12 Second

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக பனி கொட்டுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. குளிர் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். மாலை 4 மணிக்கே பனி பெய்யத் தொடங்கி விடுகிறது. நேரம் செல்லச்செல்ல இதன் தாக்கம் அதிகரிக்கிறது. மாலை 6 மணிக்கே வணிக நிறுவனங்கள், ஒட்டல்களை முடிவிடுகிறார்கள். கடந்த 2 நாட்களாக மூடுபனி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக முன்னால் நடந்து செல்பவர் கூட அடை யாளம் தெரிவதில்லை. பகல் நேரத்திலும் வாகனங்கள் அனைத்தும் முன்விளக்கு களை ஒளிரவிட்டபடி செல்கின்றன. கோவையில் இருந்து ஊட்டி சென்ற கார் மைநல்லா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது மூடுபனி கடுமையாக இருந்த தால் டிரைவரால் காரை சரியாக ஓட்ட முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர். மூடுபனி காரணமாக கட்டப்பட்டு என்ற இடத்தில் காய்கறி ஏற்றி வந்த ஒரு லாரியும் ரோட்டோர தடுப்பு சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரும், கிளீனரும் காயம் அடைந்தனர். பகல் நேரத்தில் ஒருசில மணி நேரமே வெயில் முகம் காட்டுகிறது. அந்த நேரத்தில்தான் பொதுமக் களின் நடமாட்டத்தை காண முடிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடுக்கடலில் மூழ்கிய கார்த்திகா : படப்பிடிப்பில் பரபரப்பு
Next post செந்திலுக்கு ஜோடி நமீதா?