இந்த வார ராசிபலன் (14.12.07 முதல் 20.12.07 வரை)

Read Time:14 Minute, 2 Second

1-mesam.gifமேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது:
முயற்சிகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். வரவுக்கேற்ற செலவு உண்டு. உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையில் நல்ல உயர்வு காணப்படும். குடும்பச் சூழல் சந்தோஷமாக இருக்கும்.
பெண்களுக்கு: எதிர்பார்ப்புகளில் சில சறுக்கல்கள் காணப்படும். சகோதரிகளுடன் மனக் கசப்பு ஏற்படலாம். அனுபவசாலிகளின் ஆலோசனைகள் நல்ல முறையில் வழி நடத்தும். வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.
வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடி வரும். வீண் பேச்சுக்களால் சில தொல்லைகள் ஏற்படும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

2-resabam.gifரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)
பொது:
முயற்சிகளில் தீவிரம் காட்டவும். பண வரவில் தாமதம் காணப்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். விபத்துக்கள் நேரிடலாம், கவனம் தேவை. வேலையில் கூடுதல் கவனம் தேவை.
பெண்களுக்கு: குடும்பத்தில் சுமூக நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுப காரியம் கூடி வரும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக ஊழியர்கள் கை கொடுப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.
3-midunam.gifமிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொது:
முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் துணையாக இருப்பார்கள். முக்கிய காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் பொறுப்பு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு திருப்தியைத் தரும்.
பெண்களுக்கு: அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சுப காரியம் கூடி வரும். நினைத்தது நடக்கும். முக்கிய காரியமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் பொறுப்பு கூடும். சக ஊழியர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.
4-kadagam.gifகடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொது:
சில விஷயங்களில் பாதக நிலை காணப்படும். முயற்சிகளில் தீவிரம் காட்டலாம். பண விவகாரங்களில் கவனம் தேவை. வேலையில் நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். ஞாபக மறதியால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கு: உடல் நலனில் அக்கறை காட்டவும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முக்கிய முடிவுகளில் நிதானம் தேவை. அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். பணம் தொடர்பான வேலைகளில் இருப்போர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
5-simmam.gifசிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொது:
எதிர்பார்க்கும் வெற்றிகள் தேடி வரும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் பொதுவாக அமைதி நிலவும். சில பிரச்சினைகளையும் எதிர்பார்க்கலாம். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை.
பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி நிலவும். மனதில் கிலேசம் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப காரியம் கூடி வரும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் திருப்பத்தை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களால் நல்லது நடக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். முக்கிய முடிவுகளை எடுக்கவும் இது நல்ல வாரம்.
6-kanni.gifகன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொது:
பொறுப்பு கூடும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மனதில் நினைத்தது நடக்கும். பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். காரியானுகூலம் உண்டு. வேலையில் நல்ல திருப்பம் ஏற்படும்.
பெண்களுக்கு: சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலனில் சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. வேலையில் கூடுதல் கவனம் தேவை. புதியவர்களின் அறிமுகம் உண்டாகும்.
வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்களால் சிறு சிறு தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் காட்டுவது அவசியம்.
7-thulam.gifதுலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொது:
முயற்சிகளில் சில பலிக்கும், சில தடுமாற்றத்தில் கொண்டு விடும். தளராமல் முயற்சித்தால் நல்ல பலன் காணப்படும். வீண் பேச்சால் மனக் கசப்பு ஏற்படும். பண வரவு தாமதப்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சுகவீனத்திற்கு வாய்ப்புண்டு.
பெண்களுக்கு: சிறு சிறு தடைகள் ஏற்படும். சாதுரியமாக செயல்பட்டால் தவிர்க்கலாம். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். புதிய முடிவுகளை எடுக்க நல்ல வாரம். கடன் தொல்லை வார இறுதியில் சரியாகும்.
வேலை பார்ப்போருக்கு: சிறு சிறு தவறுகளால் கெட்ட பெயரை சம்பாதிக்க நேரிடும். கூடுதல் கவனத்துடன் வேலையில் ஈடுபடுவது நல்லது. சக ஊழியர்களிடம் அளவாக வைத்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவில் குறையிருக்காது.
8-viruchagam.gifவிருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)
பொது:
காரியங்களில் முன்னேற்றம் காணப்படும். முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தினர்களால் செலவுகள் உண்டாகும். அலைச்சல் குறையும்.
பெண்களுக்கு: பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். வேலையில் நல்ல திருப்பத்ைத எதிர்பார்க்கலாம். சகோதர வழியில் லாபம் உண்டாகும். கையில் பணம் புரளும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். சக ஊழியர்கள் நன்கு ஒத்துழைப்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய உத்திகளை முயற்சித்துப் பார்ப்பீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும்.
9-dhanusu.gifதனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொது:
முயற்சிகளில் அதிக கவனம் காட்டுவீர்கள். பண வரவில் தாமதம் காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். எந்த வேலையிலும் கூடுதல் கவனம் தேவை. உடல் நல பாதிப்புக்கு வாய்ப்புண்டு. காரியங்களில் சில தாமதம் ஏற்பட்டு சரியாகும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி நிலவும். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அலுவலகத்தில் சில முக்கிய காரியங்கள் நடந்தேறும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.
வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். சக ஊழியர்களிடம் கவனம் தேவை. முக்கிய முடிவுகளில் நிதானம் இருக்க வேண்டியது அவசியம்.
10-magaram.gifமகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொது:
கடுமையாக உழைப்பீர்கள். சவால்களை எளிதில் சந்திப்பீர்கள். நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக கடினமாக பாடுபடுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். செலவுகள் அதிகமாகவே இருக்கும். அதே சமயத்தில் வரவும் இருக்கும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி காணப்படும். செயல்கள் சீராக போகும். பிரச்சினைகள் சரியாகும். சகோதர வழியில் நல்லது நடக்கும். சுப காரியம் நல்ல திசையில் செல்லும். அலுவலகத்தில் பிரச்சினைகள் இருக்காது.
வேலை பார்ப்போருக்கு: எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரிடும். புதிய வேலைக்கான முயற்சிகளில் ஈடுபடலாம். முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல வாரம். பதவி உயர்வுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
11-kumbam.gifகும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொது:
எதிலும் திருப்தி இருக்காது. அலைச்சல் அதிகமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் பெரிய அளவில் உதவி உருக்காது. எதையும் கடுமையாக முயன்றுதான் அடைய வேண்டியிருக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் சுப காரியம் கூடி வரும். நினைத்தது நடக்கும். பொருளாதார நிலை ஏற்றம் பெறும். முக்கிய முடிவுகளில் நிதானம் தேவை. அலைச்சல் குறையும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில், சுவாரஸ்யம் கூடும். பிடிப்புடன் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளில் திருப்திகரமான அணுகுமுறை இருக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் தளர்ச்சி காணப்படும்.
12-meenam.gifமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொது:
எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு மனதைக் குழப்பும். வேலையில் சில சலுகைகள் வந்து சேரும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். பணப் பிரச்சினை இருக்காது. உடல் நலனிலும் திருப்திகரமாக இருப்பீர்கள். திடீர் செலவுகளால் சில நேரங்களில் திக்குமுக்காட நேரிடும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் புதிய திருப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. புதிய முயற்சிகளுக்கு சுமாரான பலனே காணப்படும். சக ஊழியர்களிடம் அணுசரணையுடன் நடந்து கொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post திரிஷா இனி சொந்தக் குரலில்தான் பேசி நடிப்பாராம்