லெபனானுக்கு, சவுதி அரேபியா 1.5 பில்லியன் டாலர்கள் உதவி

Read Time:1 Minute, 51 Second

saudita_Mannar.jpgலெபனான் மீள்கட்டமைப்பிற்காக சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா ஐந்நூறு மில்லியன் டாலர் உதவி தொகை கொடுப்பதாக உறுதி கூறியுள்ளார். இந்த தொகையானது லெபனான் மீள்கட்டமைப்பிற்காக அரபு நாடுகள் கொடுக்கும் உதவி தொகையின் மையமாக அமையும்.

மேலும் லெபனானின் பொருளாதாரத்தினை ஆதரிப்பதற்காக லெபனான் மத்திய வங்கிக்கு ஒரு பில்லியன் டாலர் தொகை வழங்கபடுவதினையும் அவர் அங்கிகரித்து இருக்கின்றார்.

லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள், அப்பிராந்தியத்தில் போர் ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்றும் மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்பிராந்தியத்தின் நிலை குறித்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாராக் அவர்களுடன், சவுதி மன்னர் அப்துல்லா இன்று ரியாத்தில் ஆலோசனை நடத்துகின்றார்.

லெபனானில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று கோரியுள்ள எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாராக், ரோம் நகரத்தில் புதன்கிழமையன்று ஆரம்பிக்கவுள்ள லெபனான் குறித்த மாநாட்டில், உயிர்சேதங்களை நிறுத்துவது முதல் செயல் திட்டமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படை”யினரின் தகவல்களும் வேண்டுகோளும்…
Next post ஆப்கானிஸ்தானில் 7 தீவிரவாதிகள் பலி